Thursday, February 5, 2026
HomeUncategorizedபழனி கோவில் கும்பாபிஷேகம் - அடுத்த ஆண்டு ஜனவரி அறங்காவலர் குழு தகவல்.

பழனி கோவில் கும்பாபிஷேகம் – அடுத்த ஆண்டு ஜனவரி அறங்காவலர் குழு தகவல்.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில்  அடுத்த ஆண்டு  ஜனவரியில்  கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்யப்படும் என அறங்காவலர் குழு தலைவர் சந்திரமோகன் தகவல். 

 பழனி  தண்டாயுதபாணி சுவாமி  கோவிலில் அறங்காவலர் குழுவின் தலைவராக சென்னையைச் சேர்ந்த  சந்திரமோகன்  அறங்காவலர் குழு உறுப்பினர்களாக
திருப்பூர் சுப்பிரமணி, திண்டுக்கல்  மணிமாறன், ராஜசேகரன், ஒட்டன்சத்திரம்  சத்யா  ஆகியோர்  இன்று பதவியேற்றனர்.

 பின்னர்  செய்தியாளர்களிடம் பேசிய அறங்காவலர் குழு தலைவர் சந்திரமோகன்,  பழனி  கோயிலுக்கு வரும் பக்தர்கள் எந்தவித சிரமமும் இன்றி விரைவாக சாமி தரிசனம் செய்ய  ஏற்பாடுகள் செய்யப்படும்,  வருகிற தை மாதம்   தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த  இருப்பதாகவும்  தெரிவித்தார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments