Friday, February 6, 2026
HomeUncategorizedபழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழா வருகிற 26-ந்தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்குகிறது

பழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழா வருகிற 26-ந்தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்குகிறது

உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோலிலிலும் நவராத்திரி விழா தொடங்குகிறது. 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தினமும் பெரியநாயகி அம்மனுக்கு மாலை 6 மணிக்கு சிறப்பு அபிஷேகம், இரவு 7 மணிக்கு சிறப்பு அலங்காரம் நடைபெறுகிறது

விழாவின் 9-ம் நாளான அடுத்த மாதம் 4-ந்தேதி விஜயதசமி அன்று பழனி முருகன் கோவிலில் மதியம் 12 மணிக்கு உச்சிக்கால பூஜை, 1.30 மணிக்கு சாயரட்சை பூஜை ஆகியவை நடைபெறுகிறது. பின்னர் மதியம் 2.45 மணி அளவில் மலைக்கோவிலில் இருந்து பராசக்திவேல் புறப்பட்டு பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு செல்லும் நிகழ்ச்சி நடைபெறுகிறது

அதைத்தொடர்ந்து முத்துக்குமாரசுவாமி தங்கக்குதிரை வாகனத்தில் கோதைமங்கலம் செல்கிறார். அங்கு மாலை 6 மணிக்கு வில்அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments