பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரெயிலில் முன்பதிவு இன்று காலை 8 மணி முதல் தொடங்குகிறது.
பொதுமக்கள் ஐ.அர்.சி.டி.சி இணையதளம் வழியாகவோ அல்லது ரெயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்களிலிலோ ரெயில் டிக்கேட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
ஜனவரி 12-ந்தேதி பயணிக்க இன்று (திங்கட்கிழமை) முன்பதிவு செய்யலாம்.
ஜனவரி 13-ந்தேதி பயணிக்க நாளை(செவ்வாய்கிழமை) முன்பதிவு செய்யலாம், ஜனவரி 14-ந்தேதி பயணம் செய்ய வருகிற 14-ந்தேதி முன்பதிவு செய்யலாம், பொங்கல் தினமான ஜனவரி 15-ந்தேதி பயணம் செய்ய வருகிற 15-ந்தேதி முன்பதிவு செய்யலாம்.
ஜனவரி 16-ந்தேதி பயணம் செய்ய வருகிற 16-ந்தேதி முன்பதிவு செய்து கொள்ளலாம்.

