Home Uncategorized பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை: காங்கிரஸ் கண்டனம்*

பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை: காங்கிரஸ் கண்டனம்*

அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்துவதற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி கூட்டம் நடக்கவுள்ள நிலையில் பொன்முடி வீட்டில் சோதனை நடத்துவது கண்டிக்கத்தக்கது.

எதிர்க்கட்சிகள் கூட்டம் தொடங்குவதற்கு சில மணி நேரம் முன் அமலாக்கத்துறை சோதனையை தொடங்கியுள்ளது. எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவதை தடுக்க வேண்டும் என்ற ஒரே திட்டத்தை பாஜக செயல்படுத்துகிறது.

எதிரணியினரை மிரட்ட, பிளவுபடுத்த மோடி அரசு செய்யும் இந்த ஸ்கிரிப்ட் யூகிக்கக் கூடியதாக உள்ளது எனவும் கூறினார்.

Exit mobile version