Thursday, March 19, 2026
HomeUncategorizedபராமரிப்பு பணியின் காரணமாக : கடற்கரை-தாம்பரம் இடையே மின்சார ரெயில்கள் ரத்து

பராமரிப்பு பணியின் காரணமாக : கடற்கரை-தாம்பரம் இடையே மின்சார ரெயில்கள் ரத்து

பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட மின்சார ரெயில் சேவையில் இன்று (24-ந்தேதி) மற்றும் 31-ந்தேதி, நவம்பர் மாதம் 7-ந்தேதி ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, சென்னை ரெயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட மின்சார ரெயில் சேவையில் இன்று (24-ந்தேதி) மற்றும் 31-ந்தேதி, நவம்பர் மாதம் 7-ந்தேதி ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதில்,  சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே காலை 11 மணிமுதல் மதியம் 2.30 மணி வரை இயக்கப்படும் மின்சார ரெயில்களும், தாம்பரம்-கடற்கரை இடையே காலை 11.30 மணி முதல் மதியம் 3.30 மணி வரை இயக்கப்படும் மின்சார ரெயில்களும் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

கடற்கரை-செங்கல்பட்டு இடையே காலை 11.15 மணி, மதியம் 12, 1, 1.20, 2, 3 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில்கள் கடற்கரை-தாம்பரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

செங்கல்பட்டு-கடற்கரை இடையே காலை 10.15, 11 மணி, மதியம் 12.25, 1.25, 2.15 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில்கள் தாம்பரம்-கடற்கரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
திருமால்பூர்-கடற்கரை இடையே காலை 10.40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. பயணிகளின் வசதிக்காக மதியம் 1.30 மணிக்கு திருமால்பூரில் இருந்து கடற்கரைக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படும்.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments