Saturday, March 14, 2026
HomeUncategorizedபடப்பிடிப்பில் தளத்திலேயே தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை ஆரம்பித்த கமல்

படப்பிடிப்பில் தளத்திலேயே தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை ஆரம்பித்த கமல்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘விக்ரம்’.  இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

நடிகர் கமல் தனது பிறந்தநாளை நவம்பர் 7 ஆம் தேதி கொண்டாட இருக்கிறார். இதையொட்டி விக்ரம் படக்குழுவினர் இன்றே படப்பிடிப்பில் கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார்கள். இந்த கொண்டாட்டத்தின் போது, இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகர் பகத் பாசில், நடன இயக்குனர் சாண்டி, நடிகை காயத்ரி, ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன், ராஜ்கமல் பிலிம்ஸ் நாராயணன், இணை தயாரிப்பாளர் மஹேந்திரன் மற்றும் படக்குழுவினர் பங்கேற்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments