ரவி மோகன் நடிக்கும் ‘கராத்தே பாபு’ படத்தின் டைட்டில் டீசர் வெளியானது.
‘டாடா’ பட இயக்குனர் கணேஷ் கே. பாபு இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில், ரவி மோகன் அரசியல்வாதியாகவும் கராத்தே மாஸ்டராகவும் நடிக்கிறார்.
ஸ்க்ரீன் ஸீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்க, ரசிகர்கள் மத்தியில் டீசர் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

