Home Uncategorized பத்துதல படப்பிடிப்பு தளத்தில் நடிகர் சிலம்பரசன் மற்றும் கௌதம் கார்த்திக்..!

பத்துதல படப்பிடிப்பு தளத்தில் நடிகர் சிலம்பரசன் மற்றும் கௌதம் கார்த்திக்..!

மாநாடு, வெந்து தணிந்தது காடு திரைப்படத்தை தொடர்ந்து, நடிகர் சிம்பு அடுத்ததா கிருஷ்ணா டைரக்‌ஷனிதில் ‘பத்து தல’ திரைப்படத்தில் நடிச்சு வாறார். கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஆன ‘மஃப்ட்டி’ படத்தின் ரீமேக்காக ‘பத்து தல’ படம் உருவாகிறது.

2017 ஆம் ஆண்டு நியோ நோயர் வகைமையில் உருவான இந்த படம் கன்னட சினிமாவில் மிக முக்கிய அந்தஸ்தை பெற்றது. நிழல் உலக தாதாவை தேடிப்போகும் ரகசிய போலிஸ் பற்றிய கதை தான் இந்த படம். சிவராஜ் குமார் நடித்த படங்களில் சூப்பர் கலெக்‌ஷன் செஞ்ச படம் இது தான்.

இந்த திரைப்படத்தில், சிம்புவுடன் கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், கலையரசன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.  இயக்குனர் கௌதம் மேனன், பத்து தல படத்தில் சிம்புவுக்கு வில்லனாக நடிக்கிறார்.

ஸ்டுடியோ கிரீன், K. E. ஞானவேல் ராஜா தயாரிச்சு வரும் இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படத்தில் எடிட்டராக தேசிய விருது பெற்ற எடிட்டர் பிரவீன் K L பணிபுரிகிறார்.

பத்து தல படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்திருந்த நிலையில், இரண்டாவது கட்டப் படப்பிடிப்பு விசாகப்பட்டினத்திலும், மூன்றாவது கட்டப்படிப்பு கன்னியாகுமரியில் நடந்திருந்தது.

நான்காம் கட்ட படப்பிடிப்பு கர்நாடக மாநிலத்தில் உள்ள பெல்லாரி பகுதியில் நடந்தது.  இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மற்றும் கோவிலூரில் நடந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த ‘பத்து தல’ படத்தின் படப்பிடிப்பு கர்நாடக மாநிலத்தில் உள்ள துங்கபத்திரை அணையில் நடந்துச்சு. படப்பிடிப்பு நடுவே ரசிகர்களுடன் சிம்பு எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

மேலும் இயக்குனர் கிருஷ்ணா & சிம்பு ஆற்றின் கரையில் பேசுவது போல இருக்கும் புகைப்படமும், கௌதம் கார்த்திக் & சிம்பு இயக்குனர் கிருஷ்ணாவுடன் சேர்ந்து நடந்து வரும் புகைப்படங்களும் வெளியாகி உள்ளன.

பத்து தல திரைப்படம் இந்த ஆண்டு, டிசம்பர் 14 ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version