Thursday, March 5, 2026
HomeUncategorizedபுதுக்கோட்டை சமஸ்தானம் இந்தியாவில் இணைந்த நாள் இன்று

புதுக்கோட்டை சமஸ்தானம் இந்தியாவில் இணைந்த நாள் இன்று

1947 ஆகஸ்ட் 15 ல் இந்தியா சுதந்திரம் பெற்றது.அதில் 1948, மார்ச் 4வரை

புதுக்கோட்டை சமஸ்தானம் இடம் பெறவில்லை இந்திய யூனியனுடன் சேரமறுத்து தனி சமஸ்தானமாகவே இருப்பது என்கிற நிலைப்பாட்டை எடுத்தார் புதுக்கோட்டை மன்னர் ராஜகோபாலத்தொண்டைமான்.

சர்தார் வல்லபாய் படேல் எடுத்த நிர்பந்த நடவடிக்கைகளுக்குப் பின்னர் அவரும் பணிந்தார்.

அவற்றுக்குப் பின்னர் மார்ச் 4 (1948) ஆம் நாள்

புதுக்கோட்டை சமஸ்தானம் இந்திய யூனியனில் இணைந்து திருச்சி மாவட்டத்தின் மூன்று வட்டங்களாக செயல் பட்டது.

கட்டாயமாக இணைக்கப்பட்டாலும் அதற்குரிய சன்மானம் வழங்கப்பட்டதுடன், அரசியல் அதிகாரத்தை மன்னர் விரும்பாததால் அவர் குடும்பத்தினருக்கு பங்களிக்கப்பட்டு அது நிறுத்தப்படும்வரை அளிக்கப்பட்டது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments