உலகில் வேறெங்கும் இல்லாத வகையில் புதுக்கோட்டையில் கம்பன் பெருவிழா இவ்வாண்டு (2024) 10 நாட்கள் தொடர்ந்து நடத்த திட்டமிடப்பட்டு, அதில் எட்டு நாள்கள் விறுவிறுப்பாக நடந்தேறின.
இன்று (20/07/2024) 9 வது நாள் நிகழ்ச்சியின் முதல் பகுதியாக “நாட்டிய அரங்கம்” என்னும் பெயரில் “கம்ப நாட்டியம்”நடைபெற்றது. மாவட்ட தமிழாசிரியர் கழகத்தலைவர் திரு. திரு.கு.ம. திருப்பதி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்த, ஊடகவியலாளர் சென்னை. திரு.எம்.எஸ்.பரணி அவர்களும் , மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் திரு. ஐ. இருளப்பன் ஆகியோர் வாழ்த்துரை வழங்க, முக்கிய பிரமுகர்கள் பலரும் முன்னிலை வகித்தனர்.
சம்ஸ்கார் பாரதியின் மாவட்ட அமைப்பாளர் திருமதி. அனுராதா சீனிவாசன் அவர்கள் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார். நாட்டிய அரங்கத்தின் மணிமகுடத்தில் பதிக்கப்பட்ட மரகதக்கல்லாக “கம்ப நாட்டியம்” என்னும் தலைப்பில் புதுக்கோட்டை, ஸ்ரீ.லெட்சுமி டிஸ்பென்ஸரி. டாக்டர்.எஸ்.ஏ.மதுமதி அவர்களின் நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியின் இரண்டாம் பகுதியாக “பாட்டு மன்றம்” நடைபெற்றது.
” கலைமாமணி” புதுச்சேரி திரு.லிங்க. காங்கேயன் அவர்கள் நடுவராக பங்கேற்க, ”கம்பனை மிகவும் எடுத்தாண்ட கவிஞர் யார்?” என்னும் தலைப்பில், ”கவியரசு கண்ணதாசனே!” என தஞ்சை திருமதி. புவனேஸ்வரியும், ”கவிஞர் திலகம் வாலியே!” என ராஜபாளையம் திரு.உமா சங்கரும் திறம்பட பல பாடல்களைப் பாடியபடியே வாதிட்டனர். கம்பன் கழக மேடை வரலாற்றிலேயே இந்த நிகழ்ச்சியானது முதன்முறை என்பது சிறப்பு. இனி இதுவே ட்ரெண்டிங் ஆகும் என்றால் மிகையில்லை.
தொடர்ந்து 21/07/2024 அன்று (நாளை) புதுக்கோட்டை கம்பன் கழகப் பெருவிழா வின் 10 ஆம் நாள் நிகழ்ச்சி நிறைவடைகிறது. நிகழ்ச்சியின் முதல்பாதியில் கவிதைக்கு ஒரு கம்பன் என்னும் தலைப்பில்
கம்பம். திரு.செல்வேந்திரன் அவர்கள் உரை நிகழ்த்த, அதைத் தொடர்ந்து இரண்டாம் நிகழ்ச்சியாக “பட்டிமண்டபம்” நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் நடுவராக “சுகி சிவம்” பங்கேற்கிறார்.

