Thursday, March 12, 2026
HomeUncategorizedபுதுக்கோட்டை கம்பன்கழகப் பெருவிழா 6 – ஆம் நாள் 17/07/2024 (இரண்டாம் பகுதி)

புதுக்கோட்டை கம்பன்கழகப் பெருவிழா 6 – ஆம் நாள் 17/07/2024 (இரண்டாம் பகுதி)

தலைப்பு : புதுகை கம்பன் கழகத்தின் ”சந்திப்பு வளையம்”

புதுக்கோட்டை மாநகரில் 49 வது ஆண்டாக கம்பன் பெருவிழா நடைபெற்று வருகிறது. அவ்வகையில் 6 ஆம் நாள் நிகழ்ச்சியாக இன்று (17/07/2024) “சந்திப்பு வளையம்” என்னும் பெயரில் நடைபெற்றது.

எம்.ஆர்.எம்.கல்வி நிறுவனங்களின் தலைவர் திரு.எம்.ஆர்.மாணிக்கம் அவர்களின் தலைமையில் நிகழ்ச்சி வெகுசிறப்பாக நடைபெற்றது.

புதுக்கோட்டை கம்பன் கழகச்செயலாளர் திரு.ரா.சம்பத்குமார் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்த, விருந்தினராக இளங்கோ அடிகள் மன்றத் தலைவர் திரு.முரு. வைரமாணிக்கம் அவர்கள் பங்கேற்றார்.

முத்துபிள்ளை கேண்டீன் திரு.எம்.கர்ணன், ஆர்த்தி ஹோட்டல் திரு.எஸ். குமரகுரு, மாவட்ட வர்த்தகக்கழகத்தின் துணைத்தலைவர் திரு.ஹாஜி.எஸ்.ஏ.அஸ்ரபலி, சிறுதொழில் அதிபர் சங்கத்தலைவர் திரு. எஸ். ராஜ்குமார், வடகாடு ஒப்பந்தக்காரர் திரு.ப.குணசேகரன், வீ.ஜெ.நவீன அரிசி ஆலை திரு.வீ.ஜெயராமன் செட்டியார், கட்டுனர் சங்கத்தின் மாவட்டத்தலைவர் திரு. எம்.இளங்கோ, மாவட்ட வர்த்தகக்கழகத்தின் துணைத்தலைவர் திரு.கே.எஸ். முகமது இக்பால் மற்றும் ஆக்ஸ்ஃபோடு கேட்டரிங் கல்லூரி திரு.ஆ.சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியின் மையப்பொருளாக “சந்திக்காதோர் சந்திப்பு” என்கிற தலைப்பில், இராமாயண காதையில் பாத்திரங்களுக்குள் நிகழாத சந்திப்புகளை நிகழ்ந்ததாக சிந்தித்து, கற்பனையான  உரைவீச்சு நடைபெற்றது. இதில் கோயம்புத்தூர் முனைவர். திரு.க. முருகேசன், கோவில்பட்டி திரு. த.சரவணச் செல்வன், லால்குடி திருமதி.ஜோதிரவி, கோயம்புத்தூர் திருமதி. தனமணி வெங்கட், சேலத்தைச் சேர்ந்த முனைவர்கள். உமா தேவராஜன் , தேவிகுணசேகரன் ஆகியோர் பங்கேற்றனர்.

அரங்கத்தின் நடுவராக சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்கறிஞர் “இலக்கியச்சுடர். திரு.த. ராமலிங்கம்”  அவர்கள் நிகழ்ச்சியை சிறப்புற வழிநடத்தி மெருகேற்றினார்.  

“ஆத்மா யோகா மையம்” திரு.யோகா பாண்டியன் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments