வெள்ள இழப்பீடாக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.5000 வழங்கப்படும். பயிர்கள் பாதிக்கப்பட்டிருந்தால் ஹெக்டேருக்கு ரூ.30,000 நிவாரணமாக வழங்கப்படும்
கால்நடைகளை பொறுத்தவரை, மாடு உயிரிழந்திருந்தால் ரூ.40,000, இளங்கன்று உயிரிழந்திருந்தால் ரூ.30,000 வழங்கப்படும். உயிரிழப்புகளை பொறுத்தவரை 4 பேர் கொண்ட குடும்பத்தில் உயிரிழப்பு ஏற்பட்டிருந்தால் அக்குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும். மழையால் சேதமடைந்த குடிசை வீடுகளுக்கு ரூ.20,000 மற்ற வீடுகளுக்கு ரூ.10,000 படகு சேதமடைந்திருந்தால் ரூ.10,000 வழங்கப்படும்
