திருவண்ணாமலை அண்ணாமலையர் கோயில் கிரிவலம் :
சென்னையில் இருந்து சிறப்பு ரயில் இயக்கம் திருவண்ணாமலை அண்ணாமலையர் கோயில் பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு வரும் 28, 29ம் தேதிகளில் பக்தர்கள் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.
அதன்படி வரும் 28ம் தேதி மாலை 6 மணிக்கு சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து ரயில் புறப்படுகிறது.
அடுத்த நாள் காலை 9 மணிக்கு மறுமார்க்கமாக இந்த ரயில் சென்னைக்கு புறப்படும்.
