Wednesday, February 4, 2026
Homeசெய்திகள்சமையல்காரரை கடித்து குதறிய பிட்புல் நாய்.. உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு!

சமையல்காரரை கடித்து குதறிய பிட்புல் நாய்.. உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு!

மத்திய அரசு கடந்த ஆண்டு 23 ரக நாய்களை தடை செய்தது. இதில் பிட்புல் ரக நாய்களும் அடங்கும் இவற்றின் ஆக்ரோஷத்தன்மை மற்றும் பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துவது போன்றவை தடை செய்வதற்கான காரணங்களாக அமைந்தன. இந்த நிலையில் சென்னை ஜாபர்கான் பேட்டை வி.எஸ்.எம் கார்டனை சேர்ந்த கருணாகரன் வயது 48 என்ற சமையல்காரர் அந்த நாய் கடித்து உயிர் இழந்துள்ளார்.

 அவர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன் வலது கால் தொடையில் எலும்பு முறிவு ஏற்பட்டு அதற்கான சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று மதியம் சமையல் வேலைக்கு சென்று விட்டு மாலை வீட்டு வாசலில் அமர்ந்திருந்தார். அங்கு வீட்டின் அருகில் இருந்த பூங்கொடி (48) என்பவரின் பிட்புல் நாயை செல்லமாக வளர்த்து வந்தார்.  

சங்கிலியால் கட்டப்பட்டிருந்த பிட்புல் நாய். திடீரென்று சங்கிலியை அறுத்துக் கொண்டு வீட்டின் வெளியே பாய்ந்து வந்தது. அப்போது வாசலில் உட்கார்ந்து கொண்டிருந்த கருணாகரனின் வலது தொடையில் பிட்புல் நாய் மூர்க்கமாக கடித்து குதறியது. இதை பார்த்து பதறிய பூங்கொடி நாயை பிடிக்க முயன்றார். அப்போது பூங்கொடியையும் கடித்தது இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த கருணாகரன் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார்.

 இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கருணாகரன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். பிறகு பிரேத பரிசோதனைக்காக கே.கே நகர் இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து குமரன் நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 நாய் கடித்தலில் படுகாயம் அடைந்த நாயின் உரிமையாளர் பூங்கொடி கால் மற்றும் கைகளில் பலத்த காயங்களுடன் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அது மட்டும் இல்லாமல் மூர்க்கமாக கடித்துக் குதறிய பிட்புல் நாயை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்துச் சென்று சென்னை கண்ணம்மாபேட்டை நாய்கள் காப்பகத்தில் அடைத்தனர்.

 இதே போல் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏழு வயது சிறுமியை பிட்புல் நாய் கடித்தது. அந்த சிறுமிக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய வேண்டிய நிலையும் ஏற்பட்டது. இதுபோல் தொடர்ந்து அதிர்ச்சி சம்பவங்கள் சென்னையில் நடந்து கொண்டிருக்கிறது. நாய்களால் பொதுமக்களிடையே பெரும் பீதி நிலவி வருகிறது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments