பிரதமர் மோடியின் 75வது பிறந்தநாள் விழா கடந்த 17ஆம் தேதி கொண்டாடப்பட்டது. இதனை ஒட்டி உலக தலைவர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர். இங்கிலாந்து மன்னர் சார்லஸ் ஒரு கடம்ப மரத்தை பரிசாக அனுப்பி வைத்திருந்தார். இந்த தகவலை டெல்லியில் உள்ள இங்கிலாந்தின் தூதரக அதிகாரிகள் பிரதமருக்கு 17ஆம் தேதி தெரிவித்தனர். இதனை “அன்னையின் பெயரில் ஒரு மரம்” என்கின்ற திட்டத்தில் நட தூதரகம் வலியுறுத்தியது.

இதன் அடிப்படையில் பிரதமர் மோடி நேற்று தனது இல்லத்தில் அந்த மரக்கன்றை நட்டு நீரூற்றினார். கடம்ப மரம் இந்திய புராணங்களோடு தொடர்புடையது. வடக்கில் கிருஷ்ண புராணத்திலும், தெற்கில் முருக புராணத்திலும் இது இடம்பெற்றுள்ளது. இது தவிர ஆயுர்வேத மருத்துவத்திலும் இந்த மரம் மிகுந்த பங்களிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

