Home Uncategorized பூமிக்கு வந்த சுபான்ஷு சுக்லா.. வாழ்த்துக்கள் கூறிய பிரதமர் மோடி!

பூமிக்கு வந்த சுபான்ஷு சுக்லா.. வாழ்த்துக்கள் கூறிய பிரதமர் மோடி!

கடந்த இரு வாரங்களாக பூமிக்கு மேலே 400 கிலோமீட்டரில் சுற்றி வந்த சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கி பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்ட இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா இன்று பிற்பகல் 3 மணியளவில் வெற்றிகரமாக பூமிக்கு வந்து சேர்ந்தார். 

அவர் பயணித்து வந்த டிராகன் விண்கலம் வெற்றிகரமாக கேலிபோர்னியா அருகே கடலில் தரை இறங்கியது.. சுபான்ஷு சுக்லா உள்பட 4 விண்வெளி வீரர்களையும் மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டு மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு அவர்கள் அனைவரும் நலமாக உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. சுபான்ஷு சுக்லா  பத்திரமாக பூமிக்கு வந்ததை தொடர்ந்து அவரது குடும்பத்தினர் கேக் வெட்டி கொண்டாடி கொண்டாடினர். 

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பூமிக்கு திரும்பிய நம் நாட்டின் வீரர் சுபான்ஷு சுக்லாவை பிரதமர் மோடி வரவேற்றுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது ‛‛விண்வெளிக்கான வரலாற்று சிறப்புமிக்க பயணத்தை முடித்து பூமிக்கு திரும்பும் குரூப் கேப்டன் சுபன்ஷு சுக்லாவை வரவேற்பதில் நாட்டு மக்களுடன் நானும் இணைகிறேன்.

சர்வதேச விண்வெளி நிலையத்தைப் பார்வையிட்ட இந்தியாவின் முதல் விண்வெளி வீரராக அவர்உள்ளார். அவரது அர்ப்பணிப்பு, தைரியம் மற்றும் முன்னோடியான மனநிலை உள்ளிட்டவற்றின் மூலமாக ஒரு பில்லியன் மக்களின் கனவுகளை ஊக்குவித்துள்ளார். அவரது இந்த பயணம் நம் நாட்டல் இருந்து விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டமான ககன்யான்-யை நோக்கிய மற்றொரு மைல்கல்லை குறிக்கிறது” என தெரிவித்துள்ளார்.

Exit mobile version