Thursday, March 12, 2026
Homeசெய்திகள்கடத்தல் லாரியை மடக்கிப்பிடித்த போலீசார்.. 524 சமையல் சிலிண்டர்கள் பறிமுதல்!

கடத்தல் லாரியை மடக்கிப்பிடித்த போலீசார்.. 524 சமையல் சிலிண்டர்கள் பறிமுதல்!

உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியில், 524 சமையல் எரிவாயு சிலிண்டர்களுடன் கடத்தப்பட்ட லாரியைப் போலீசார் வெற்றிகரமாக மீட்டதோடு, இதில் தொடர்புடைய 7 பேரைக் கைது செய்துள்ளனர்.

கடந்த மார்ச் 2-ஆம் தேதி பாரத் பெட்ரோலியம் ஆலைக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த இந்த லாரி மார்ச் 6-ஆம் தேதி காணாமல் போனது. தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு, ஜான்சி-கான்பூர் நெடுஞ்சாலையில் கைவிடப்பட்ட நிலையில் லாரியைக் கண்டறிந்த போலீசார், சிசிடிவி மற்றும் ரகசியத் தகவல்களின் அடிப்படையில் குற்றவாளிகளைப் பிடித்தனர்.

லாரி உரிமையாளரிடம் வேலை பார்த்த முன்னாள் ஓட்டுநர்கள் இருவர், தங்களுக்கு வரவேண்டிய சம்பள நிலுவைத் தொகையை எடுக்கத் திட்டமிட்டு இந்தத் திருட்டில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவர்களிடமிருந்து ரூ. 11 லட்சம் ரொக்கம் மற்றும் ஒரு கைத்துப்பாக்கியையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments