Home Uncategorized வரும் பொங்கல் பண்டிகை (2024) வரவிருக்கும் திரைப்படங்கள்

வரும் பொங்கல் பண்டிகை (2024) வரவிருக்கும் திரைப்படங்கள்

தங்கலான் 

டைரக்டர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்து வரும் திரைப்படம் தான் ‘தங்கலான்’ . இந்தப்படத்தில் நடிகை மாளவிகா மோகனன் விக்ரமிற்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்தை அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தான் வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுது.

அயலான் 

டைரக்டர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் “அயலான்”. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு எல்லாம் முடிஞ்சு போச்சு. படத்தின் சிஜி வேலைகள் முடியாத காரணத்தால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி சென்றது. இறுதியாக படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என படத்தின் டீசர் வெளியீட்டு  அறிவிச்சுப் புட்டாய்ங்க.

லால்சலாம் 

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நடிகர் விஷ்னு விஷால், விக்ராந்த் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் லால் சலாம். இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிச்சு இருக்கார். இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிச்சிருக்குது. படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ராஹ்மான் இசையமைக்கிறார். இந்த படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள காரணத்தால் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இந்த திரைப்படமும் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தான் வெளியாகவுள்ளது.

அரண்மனை -4

டைரக்டர் சுந்தர் சி இயக்கத்தில் 3 பாகங்களாக வெளியாகி ஹிட் ஆன திரைப்படம் அரண்மனை. கடைசியாக வெளியான அரண்மனை 3 திரைப்படம் சரியான விமர்சனத்தை பெறவில்லை என்றாலும் கூட இயக்குனர் சுந்தர் சி அரண்மனை 4 படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தில் தமன்னா, ராசிக்கன்னா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். படத்திற்க்கு இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழன் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version