Thursday, February 26, 2026
Homeசெய்திகள்நீட் தேர்விற்கு படிக்க சொன்னதால் ஆத்திரம்.. தந்தையை சுட்டு, துண்டு துண்டாக கூறுபோட்ட மகன்.. பகீர்!

நீட் தேர்விற்கு படிக்க சொன்னதால் ஆத்திரம்.. தந்தையை சுட்டு, துண்டு துண்டாக கூறுபோட்ட மகன்.. பகீர்!

உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவில் நீட் தேர்வு அழுத்தத்தால் 21 வயது இளைஞன் தந்தையை கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. லக்னோவின் ஆஷியானா பகுதியில் வைத்திய பரிசோதனை மையம் நடத்தி வந்தவர் பிரதாப் சிங் வயது(49).

இவரது மனைவி கடந்த 2018 ஆம் ஆண்டு உயிரிழந்த நிலையில் மகன் மற்றும் மகள் உடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தனது 21 வயது மகன் அக்ஷத்தை இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு படிக்க சொல்லி பிரதாப் சிங் அழுத்தம் கொடுத்து வந்துள்ளார்.
இதுதொடர்பாக கடந்த பிப்ரவரி 20 அன்று வீட்டில் இருவரிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. அப்போது அக்ஷத்தின் தங்கையும் அங்கு இருந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் கோவத்தை கட்டுப்படுத்த முடியாமல் அக்ஷத், வீட்டில் தந்தை பிரதாப் சிங் லைசென்ஸ் பெற்று வாங்கி வைத்திருந்த ரைபிளை எடுத்து அவரை சுட்டு கொன்றுள்ளார். அதுமட்டும் இல்லாமல் தங்கையின் கண் முன்னே தனது தந்தையின் உடலைத் துண்டு துண்டாக வெட்டியுள்ளார். சில உடல் பாகங்களைச் சதரோனா கிராமம் அருகே வீசிவிட்டு, மீதமுள்ளவற்றை வீட்டில் இருந்த நீல நிற பிளாஸ்டிக் டிரம்முக்குள் மறைத்து வைத்துள்ளார்.

இந்த விஷயத்தை வெளியே சொன்னால் உன்னையும் கொன்றுவிடுவேன் என தங்கையை அக்ஷத் மிரட்டியுள்ளார். பிரதாப் சிங்கை காணவில்லை என உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வந்துள்ளனர். அப்போது அக்ஷத்தின் மீது சந்தேகம் ஏற்படவே அவரை விசாரித்துள்ளனர்.

அக்ஷத்தின் முன்னுக்குப் பின் முரணான பதில்களால் சந்தேகமடைந்து அவரிடம் தீவிர விசாரணை நடத்திய நிலையில் அவர் கொலை செய்த உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார். அதன் பிறகு டிரம்மில் வைக்கப்பட்டிருந்த உடலின் பாகங்களையும் போலீஸ் அதிகாரிகள் பரிசோதனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். இந்நிலையில் கடந்த 23 ஆம் திகதி அக்ஷத் கொலை வழக்கில் கைது செய்யபட்டார். சொந்த மகனே தந்தையை கொலை செய்த விவரம் அங்கு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments