Tuesday, March 10, 2026
HomeUncategorizedராகவா லாரன்ஸின் 'ருத்ரன்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

ராகவா லாரன்ஸின் ‘ருத்ரன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

நடிகர் ராகவா லாரன்ஸின் ‘ருத்ரன்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது. நடிகர்கள் ஆர்யா மற்றும் சசிகுமார் ஆகியோர் படக்குழுவினருக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

பல வெற்றி படங்களை தந்த நடிகர் ராகவா லாரன்ஸ். தற்போது இவரது நடிப்பில் ‘ருத்ரன்’ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. தொடர்ந்து அதிகாரம் மற்றும் சந்திரமுகி 2 போன்ற படங்களில் அவர் நடிக்க உள்ளார்.

ருத்ரன் படத்தை 5 ஸ்டார் கிரியேஷன்ஸ் சார்பில் கதிரேசன் இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் தயாரிப்பாளரும் அவர் தான். இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ‘Evil is not Born. It is Created’ என்ற டேக் லைனை இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தாங்கி நிற்கிறது. இந்தப் போஸ்டரில் ராகவா லாரன்ஸ் அதிரடி சண்டைக் காட்சியில் மிரட்டுவதை போல உள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments