Friday, April 10, 2026
HomeUncategorizedராமர் கோயில் கும்பாபிஷேக விழா-நேரடியாக ஒளிபரப்பு

ராமர் கோயில் கும்பாபிஷேக விழா-நேரடியாக ஒளிபரப்பு

ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவையொட்டி பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்தியா முழுவதும் பூத் கமிட்டி அளவில் ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை நேரடியாக ஒளிபரப்ப பாஜக திட்டமிட்டுள்ளது.

தற்போது இந்தியாவை தாண்டி உலகின் பல நாடுகளில் நேரடி ஒளிபரப்பு செய்ய திட்டம் தீட்டப்பட்டுள்ளது, அமெரிக்காவில் உள்ள நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நேரலையில் ஒளிபரப்பப்படவுள்ளது.

அதுதவிர, பல்வேறு நாடுகளிலும் உள்ள இந்திய தூதரகங்களிலும் நேரலையில் ஒளிபரப்பப்படவுள்ளது. அதேபோல், உத்தரப்பிரதேசத்தில் உள்ள அனைத்து சிறைகளிலும் ராமர் கோயில் கும்பாபிஷேகம் நேரலையில் ஒளிபரப்பப்படும் என்று சிறைத்துறை அமைச்சர் தர்மவீர் பிரஜாபதி தெரிவித்துள்ளார்.

“தற்போது 1.05 லட்சத்திற்கும் அதிகமான கைதிகள் உள்ளனர். அவர்களும் இந்த நாட்டின் குடிமக்கள். அவர்கள் இந்த நிகழ்வில் இருந்து விலகி இருக்கக்கூடாது என்பதற்காக, மாநிலத்தில் உள்ள அனைத்து சிறைகளிலும் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படும்.” என்றார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments