Wednesday, March 4, 2026
HomeUncategorizedரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் கமலின் விக்ரம்

ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் கமலின் விக்ரம்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்த விக்ரம் படம் நாடு முழுவதும் திரையிடப்பட்டது. இந்தப் படம்   கமல் ரசிகர்கள் மட்டுமில்லாமல் அனைத்து தரப்பு மக்களிடையேயும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. 

இப்படத்தில் நடிகர் கமல்ஹாசனுடன் விஜய் சேதுபதி, சூர்யா, பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருந்தது. ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த விக்ரம் திரைப்படம் இன்று உலகமெங்கும் பிரம்மாண்டமாக ரிலீசாகி உள்ளது.

இப்படம் வெளியிடப்பட்டிருக்கும் தியேட்டர் முன் குவிந்த ரசிகர்கள், பட்டாசு வெடித்தும், கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம், மேள தாளங்கள் முழங்க நடனமாடியும் தடபுடலாக கொண்டாடினர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments