Home Uncategorized டப்பிங் யூனியன் அலுவலக கட்டடத்துக்கு சீல்

டப்பிங் யூனியன் அலுவலக கட்டடத்துக்கு சீல்

சென்னை சாலிகிராமத்தில் உள்ள சினிமா டப்பிங் யூனியன் அலுவலக கட்டடத்துக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

நடிகர் ராதா ரவி தலைமையில் செயல்பட்டு வரும் டப்பிங் யூனியன் கட்டடம் விதிமுறைகளுக்கு எதிராக கட்டப்பட்டதாகப் புகார் அளிக்கப்பட்டிருந்தது நேற்று இன்பாக்ஸ் வந்த தகவல் : டப்பிங் யூனியனுக்கு சீல்?! நடிகர் ராதாரவி தலைமையில் செயல்படும் டப்பிங் யூனியன் கட்டிடம் அரசு விதிகளுக்கு மீறி கட்டப்பட்டதாக எழுந்த புகாரின் காரணமாக பல கட்ட விசாரணைகளுக்கு பிறகு ராதாரவி தரப்பில் தகுந்த ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படாததால், நாளை (சனிக்கிழமை) 80 அடி சாலையில் உள்ள டப்பிங் யூனியன் வளாகம் சென்னை மாநகராட்சி அதிகாரிகளால் சீல் வைக்க உத்தரவிடப்பட்டதாக தகவல் வந்துள்ளது.

இதை தடுக்க ராதாரவி எடுத்த இறுதி கட்ட முயற்சிகள் எதுவும் பயன் தராமல் போனதால் இரவோடு இரவாக அலுவலகத்தில் உள்ள ஆவணங்கள் பொருட்களை எடுத்து சென்றதாக ஒரு தகவல்

Exit mobile version