சென்னை வானிலை ஆய்வு மைய அறிக்கை: தென் மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று (நவம்பர் 9) சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை முதல் 5 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் அனேக இடங்களில் பரவலாக கனமழை பெய்யக்கூடும்.
