தமிழ் மொழியில் 1994-ம் ஆண்டு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சிற்பி இசையமைப்பில் வெளிவந்த நாட்டாமை படத்தை, தெலுங்கில் பெத்தராயுடு என்ற பெயரில் ரீமேக் செய்து 1995ம் ஆண்டு வெளியிட்டு அங்கும் பெரிய வெற்றியைப் பெற்றார்கள். தெலுங்கு ரீமேக்கை ரவி ராஜா பினி செட்டி இயக்க, மோகன் பாபு, சௌந்தர்யா, பானுப்ரியா ஆகியோருடன் ரஜினிகாந்தும் சிறப்புத் தோற்றத்தில் நடித்தார்.
விஜயகுமார் நடித்த கதாபாத்திரத்தைத்தான் தெலுங்கில் ஏற்று நடித்தார் ரஜினிகாந்த். மோகன் பாபு உடனான நட்பின் அடிப்படையில் அக்கதாபாத்திரத்தில் நடித்தார் ரஜினி. ரஜினியின் கதாபாத்திரம் தெலுங்கு ரசிகர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
