சூர்யாவின் `சில்லுனு ஒரு காதல்’ படத்தின் மூலம் தயாரிப்பாளர் ஆனவர் ஞானவேல் ராஜா. தொடர்ந்து ‘சிங்கம்’, ‘சிங்கம்3’, ‘மாசு என்கிற மாசிலாமணி’ ஆகிய படங்களை தயாரிச்சா.
நீண்ட இடைவெளிக்கு பின், இப்போது மீண்டும் சூர்யா படத்தை தயாரிக்கிறார். இது ஒரு பான் இந்தியா படம் என்பதால் சூர்யாவின் ஜோடியாக திஷா பதானி நடிக்கிறார்.
சூர்யா இதில் அரத்தர், வெண்காட்டர், மண்டாங்கர், முக்காட்டர், பெருமனத்தார் அப்படீன்னு இப்பத்திய ட்ரெண்ட்படி ஏகப்பட்ட வேஷங்களில் நடிக்கிறார்.
இதற்காக ஸ்பெஷல் மேக்கப் டெஸ்ட்கள், மற்றும் போட்டோஷூட்கள் எடுத்த பிறகே கெட்டப்புகள் இறுதி செய்யப்பட்டுச்சாம்.
வழக்கம் போல் சிவாவின் ஆஸ்தான டீமில் உள்ளவர்கள் பலரும் படத்தில் இருக்கிறார்கள். வெற்றி பழனிசாமி கேம்ராவை ஹேண்டில் செய்கிறார்.
தேவி ஶ்ரீபிரசாத் இசை. ‘மாயாவி’, ‘சிங்கம்’, ‘சிங்கம்2’ படங்களையடுத்து அவர் சூர்யாவின் படத்திற்கு இசையமைக்கிறார். வசனங்களை மதன் கார்க்கி எழுதுறார்.
இணை கதாசிரியராக ஆதிநாராயணா என்பவரும் இணைஞ்சிருக்கார். திஷா பதானி தவிர, அபிமான நட்சத்திரங்கள் பலர் இருக்காய்ங்க.
தெலுங்கு, மலையாள படவுலகில் இருந்தும் பலர் நடிக்கிறார்கள். கலைஞர் என்பதாக் பேர் மாறிய ஈ சி ஆர் சாலையில் ஷீட்டிங் தொடங்கி, தொடர்ந்து பத்து நாட்கள் நடந்து முடிஞ்சு போச்சாம். இப்போ அடுத்தகட்டமா கோவா பறக்கிறாய்ங்க.
இப்போ கோவாவிற்கு மிகப்பெரிய நடிகர்கள் பட்டாளமே கிளம்பவிருக்கிறது. படத்தின் மெயினான போர்ஷன்கள் அங்கே ஷூட் செய்யப்பட உள்ளன என்றும் அதன்பின், தென்மாவட்ட பகுதியிலும் ஷூட் நடக்கும் என்கிறார்கள்.
சூர்யா 42 படத்திற்கான டைட்டில்களாக ‘அரசன்’ ‘மன்னன்’ மகாரஜா மாதிரியான கம்பீர பெயர்களை பரீசீலிச்சு வாராய்ங்க.
அதே சமயம் பாலாவின் படத்திற்கு ‘வணங்கான்’ அப்படீஙகற ஃப்யூர் தமிழில் தலைப்பு வைத்ததை போல, இதற்கும் தூய தமிழில் தலைப்புகளைத் தேடிக்கிட்டு இருக்காய்ங்க.

