சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள திரைப்படம் தான் “கூலி”. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தின் ஷூட்டிங் முடித்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்த திரைப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி ரிலீசாக உள்ள நிலையில் இந்த படத்திற்கான அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கைதி, விக்ரம், லியோ உள்ளிட்ட அனைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் கூலி திரைப்படமும் அந்த வரிசையில் சேரும் என்று ரசிகர் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இப்படத்தில் வில்லனாக நாகார்ஜுனா நடித்துள்ளார். அனிருத் இசை அமைத்துள்ளார். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் ரஜினிகாந்தின் 171 வது படமாக அமைகிறது. பெரிய பட்ஜெட் படங்கள் அனைத்தும் சமீப காலமாக காலை வாரிக் கொண்டிருக்கும் நிலையில், இந்த திரைப்படம் அதிலிருந்து தப்பி ஹிட் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

