Friday, March 13, 2026
HomeUncategorized" கடன் வாங்கி சமைக்கப்பட்ட புளிக்குழம்பே கம்ப ராமாயணம்." நகைச்சுவை பேச்சாளர்.முனைவர். எஸ்.இராமச்சந்திரன்

” கடன் வாங்கி சமைக்கப்பட்ட புளிக்குழம்பே கம்ப ராமாயணம்.” நகைச்சுவை பேச்சாளர்.முனைவர். எஸ்.இராமச்சந்திரன்

” தன் வீட்டில் மசாலாப் பொருட்கள் இல்லாததால் ஒருத்தி தன் பக்கத்து வீட்டுக்காரியிடம் சென்று கைமாற்று வாங்கி  வந்து புளிக்குழம்பு வைத்தாள். அந்த கைமாற்றைக் கொடுத்தவளும் புளிக்குழம்பு வைத்தாள். பின் இருவருமே தாங்கள் வைத்த குழம்பை தங்களுக்குள் பரிமாறிக் கொண்டனர். இவள் குழம்பு அவள் வீட்டுக்குப் போனது. அவள் குழம்பு  இவள் வீட்டுக்கு வந்தது. 

      அன்றிரவு அவரவர் கணவன்மார்கள் அந்த குழம்பைச் சாப்பிட்டனர். இதில் மசாலாவை  கைமாற்றாக  தந்தவள் வைத்த குழம்பை சாப்பிட்ட பக்கத்து வீட்டுக்காரன் சாதாரணமாகவே ஏனோதானோ என்று சாப்பிட்டான். 

       ஆனால் கைமாற்றாக வாங்கியவள் வைத்த குழம்பை  அவளின் பக்கத்து வீட்டுக்காரக் கணவன் ரசித்து ருசித்து விரும்பிச் சாப்பிட்டான். 
  ஆக, ஒரே மசாலாதான். அவரவர் கைப்பக்குவமே குழம்பை ருசியாக்குகிறது. அதுபோல் வால்மீகி முனிவர் ராமாயணத்தை கம்பனுக்கு கைமாற்றாக தந்தார். அதைப் பெற்ற கம்பனோ ராமாயாணத்தை வால்மீகியைவிட மிகவும் சுவைபட தமிழில் படைத்தான்”  என்று M.ராமச்சந்திரன் அவர்கள் நிகழ்ச்சியினை மிகவும் கலகலப்பாக்கினார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments