இந்தியாவின் ரைடு-ஹெய்லிங் சந்தையில் நீண்டகாலமாக ஆதிக்கம் செலுத்தி வந்த ஓலா மற்றும் உபெர் நிறுவனங்களுக்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ள ராபிடோ (Rapido), தற்போது மாதாந்திரச் செயலில் உள்ள பயனர்கள் (MAU) எண்ணிக்கையில் அவ்விரு நிறுவனங்களின் கூட்டு எண்ணிக்கையையும் விட விஞ்சிப் புதிய சாதனையைப் படைத்துள்ளது.
2026 பிப்ரவரி நிலவரப்படி, ராபிடோவின் மாதாந்திரப் பயனர்கள் எண்ணிக்கை சுமார் 7.4 கோடியாக உயர்ந்துள்ள நிலையில், இது உபெர் (சுமார் 4 கோடி) மற்றும் ஓலா (3 கோடிக்கும் குறைவு) ஆகிய இரண்டின் மொத்தப் பயனர்களை விடவும் அதிகமாகும்.
குறிப்பாக பைக் டாக்ஸி பிரிவில் 70% சந்தைப் பங்களிப்புடன் அசைக்க முடியாத இடத்தில் உள்ள ராபிடோ, சமீபகாலமாக கார் மற்றும் ஆட்டோ சேவைகளிலும் தனது பிடியை வலுப்படுத்தி வருவதால், இந்தியப் போக்குவரத்துச் சந்தையில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

