Thursday, February 5, 2026
HomeUncategorizedரூ.186.51 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 1036 காவலர் குடியிருப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்

ரூ.186.51 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 1036 காவலர் குடியிருப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்

சென்னை, கொச்சின் ஹவுஸ் காவலர் குடியிருப்பு வளாகத்தில் ரூ.186.51 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 1036 காவலர் குடியிருப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து, 5 காவலர்களின் குடும்பத்தினருக்கு குடியிருப்புக்கான சாவிகளை வழங்கினார்.

மேலும், உள்துறை சார்பில் ரூ. 36.52 கோடி செலவில் 32 காவலர் குடியிருப்புகள், 4 காவல் நிலையங்கள், 2 காவல் துறை கட்டடங்கள், சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை பணியாளர்களுக்கான 11 குடியிருப்புகள், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணியாளர்களுக்கான 80 குடியிருப்புகள், 3 தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி நிலையங்கள் மற்றும் 1 தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறைக்கான பாசறை, ரூ. 55.19 கோடி செலவில் “உங்கள் சொந்த இல்லம்” திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள 253 வீடுகள் ஆகியவற்றையும் திறந்து வைத்தார். மேலும் குடியிருப்புகளை பார்வையிட்டு, காவலர் குடும்பத்தினருடன் கலந்துரையாடினார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments