விருதுநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், விருதுநகர் மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகத்தில் ரூ.70.57 கோடி மதிப்பீட்டில் புதிய ஆட்சியர் அலுவலகக் கட்டடம் கட்டும் பணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகத்தில் நடைபெற்ற புதிய ஆட்சியர் அலுவலகக் கட்டட அடிக்கல் நாட்டு விழாவில், அரசு வேலை வழங்கிட கோரி உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தில் மனு அளித்திருந்த திருமதி மு.பாண்டிதேவி அவர்களுக்கு, அவரது குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு அங்கன்வாடி பணியாளர் பணியிடத்திற்கான பணிநியமன ஆணையினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

