Sunday, March 22, 2026
HomeUncategorizedஎண்ணெய் தேய்த்து குளிப்பதால் உடம்புக்கு எவ்ளோ நன்மைகள் இருக்கு தெரியுமா?

எண்ணெய் தேய்த்து குளிப்பதால் உடம்புக்கு எவ்ளோ நன்மைகள் இருக்கு தெரியுமா?

உடல் முழுவதும் நல்லெண்ணெய் பூசி குளிப்பது நம் பாரம்பரியம் மற்றும் பண்பாடு ஆகும். தீபாவளி, வருடப்பிறப்பு, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் நம் முன்னோர்கள் எண்ணெய் குளியல் இல்லாமல் கொண்டாடவே மாட்டார்கள். இந்த முறையை வாரத்தில் இரு முறை பின்பற்றி நோய்கள் இன்றி வாழ்ந்தனர். தற்போதைய ஆய்வுகள் எண்ணெய் பூசி குளிப்பதால் உடலுக்கு நல்ல ஆரோக்கியம் கிடைக்கும் என்கின்றன. எண்ணெய் பூசி குளிப்பதால் உடல் தளர்வு பெறும். குழந்தை பருவத்திலிருந்தே இந்த பழக்கத்தை நாம் அன்றாட வாழ்வில் பின்பற்ற வேண்டும்.

 எண்ணெய் பூசி குளிப்பது எப்படி: 

காலையில் 50 முதல் 100 மில்லி எண்ணெய் எடுத்து தலைமுதல் பாதம் வரை நன்கு தேய்த்து ஊற வைக்க வேண்டும். 15 முதல் 20 நிமிடம் வரை ஊற வைத்து பின் சூடான நீரில் குளிக்க வேண்டும். குளித்த பின் பிரண்டை துவையலும், மிளகு ரசமும் சாப்பிட வேண்டும். அசைவ பிரியர்கள் ஆட்டுக்கால் பாயா உணவாக உண்ணலாம். இது உடலுக்கு புதிய சக்தி அளிக்கும்.

 குணமாகும் நோய்கள்: 

* தோல் மற்றும் சரும நோய்கள் குணமாகும்.
* சொறி, சிரங்கு, முகப்பரு வராமல் தடுக்கும்; தேகம் பொலிவு பெறும்.
* எலும்பு மூட்டுகளுக்கு வலு சேர்க்கும்.
* தலை, முதுகு, இடுப்பு, கை, கால், பாத வலிகள் குறையும்; தசைகள் வலுப்பெறும்; நகங்கள் வளரும்; தோல் சுருக்கம் நீங்கும்.
* குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த நன்மையை அடையலாம்.
* கண் எரிச்சல்கள் மற்றும் கருவளையங்கள் நீங்கும்.
* உடல் இதமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.
* பித்த மயக்கம் மற்றும் அதிகாலை பித்த வாந்தி நீங்கும்.
* உடல் உள்ளுறுப்புகளின் செயல்பாடு மேம்படும்.

ஆரோக்கியமான தலைமுடி:

* தலைமுடிகளுக்கு வேர் முதல் நுனி வரை சத்துக்கள் சேர்க்கும்; பொடுகு நீங்கும்; தலைமுடி நன்றாக வளரும்.
*உடல் சூடு மற்றும் பித்தம் காரணமாக ஏற்படும் வேர்க்குரு, கொப்புளங்கள், அரிப்பு, மற்றும் தேக வறட்சி ஆகியவை நீங்கும். எனவே, நம் முன்னோர்கள் பயன்படுத்திய அன்றாட வாழ்வியல் முறைகளை நாம் சரியாக பின்பற்றி எல்லா நலன்களையும் பெற்று ஆரோக்கியமாக வாழலாம்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments