Home Uncategorized Kelvinator நிறுவனத்தை வாங்கிய Reliance!

Kelvinator நிறுவனத்தை வாங்கிய Reliance!

1970கள் மற்றும் 80களில் வீட்டு உபயோக பொருட்கள் உற்பத்தியில் பிரபலமாக திகழ்ந்த Kelvinator நிறுவனத்தை விளக்கி வாங்கி இருப்பதாக Reliance Retail  நிறுவனம் அறிவித்துள்ளது. 

இந்த சந்தைக்காக ஸ்வீடன் நாட்டின் எலக்ட்ரோலக்ஸ் நிறுவனத்திடம் இருந்து வாங்கியதாக தெரிவித்துள்ளது. ஆனால் விலை விவரத்தை இன்னும் வெளியிடவில்லை.

வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் ஒவ்வொன்றும் ரூ.1470.40க்கு வர்த்தகம் செய்யப்பட்டன, இது பிஎஸ்இயில் 0.45 சதவீதம் சரிந்தது.

இது குறித்து இஷா அம்பானி கூறுகையில்,”தொழில்நுட்பத்தை அணுகக்கூடியதாகவும், அர்த்தமுள்ளதாகவும், எதிர்காலத்திற்குத் தயாராகவும் மாற்றுவதன் மூலம் ஒவ்வொரு இந்தியரின் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்வதே எங்கள் நோக்கம்” என்று ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்ச்சர்ஸ் லிமிடெட் (RRVL) நிர்வாக இயக்குனர் இஷா அம்பானி கூறினார். 

Exit mobile version