விழுப்புரத்தில் 1916ம் வருசம் அக்டோபர் 2ந் தேதி பிறந்தார். கலைமீது ஆர்வம் கொண்ட நீலகண்டன் நாடகங்களுக்கு கதை, வசனம் எழுதினார் .அவர் எழுதிய நாம் இருவர் நாடகத்தை ஏ.வி.மெய்யப்ப செட்டியார் படமாக தயாரிச்சார். வேதாள உலகம் படத்திற்கு வசனம் எழுதினார். அண்ணாதுரையின் ஓர் இரவு படத்தின் மூலம் இயக்குனர் ஆனார்.
1957ம் ஆண்டு எம்.ஜி.ஆர் நடித்த சக்ரவர்த்தி திருமகள் படத்தை இயக்கினார். தொடர்ந்து நீதிக்கு தலைவணங்கு, நேற்று இன்று நாளை, ராமன் தேடிய சீதை, சங்கே முழுங்கு, குமரிகோட்டம், நீரும் நெருப்பும், ஒரு தாய் மக்கள், என் அண்ணன், மாட்டுக்கார வேலன், கணவன், காவல்காரன், கொடுத்து வைத்தவள், திருடாதே, படங்களை இயக்கினார்.
எம்.ஜி.ஆர் இயக்கிய உலகம் சுற்றும் வாலிபன், மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் படங்களில் அவருடன் இணை இயக்குனராக ஒர்க் செஞ்சார்.
எம்.ஜி.ஆரை கமர்ஷியல் ஹீரோவாக்கியதில் நீலகண்டனுக்கு பெரும் பங்கு உண்டு. கடைசிவரை எம்.ஜி.ஆருடன் நட்பாக இருந்த நீலகண்டன், அவரிடம் எந்த உதவியையும் கேட்டு பெற்றதில்லை.
கொஞ்சம் விரிவாகச் சொல்வதானால் எம்.ஜி.ஆர். நடிகர் மட்டுமல்ல. தயாரிப்பாளரும் கூட. தயாரிப்பாளர் மட்டுமா? இயக்குநரும் கூட. ஒரு படத்தின் வெற்றிக்கு என்னென்ன தேவை என்பதை கவனத்தில் கொண்டு செயல்படுபவர். அப்படி அவர், கதைக்கு எவையெல்லாம் தேவை என்று சேர்த்தாரோ… வெகுஜன மக்களை எந்தந்த விஷயங்கள் ஈர்க்கும் என்று கணக்கிட்டுக் கணித்தாரோ… அந்த விஷயங்கள்தான் ஒரு சினிமாவுக்கான வெற்றி ஃபார்முலா என்று உருவானது. அவைதான்… ‘எம்ஜிஆர் ஃபார்முலா’ என்று கொண்டாடப்பட்டது. எம்ஜிஆரையும் எம்ஜிஆர் ஃபார்முலாவையும் கனகச்சிதமாக உள்வாங்கிக் கொண்டு, பல வெற்றிப் படங்களைக் குவித்தவர்… எம்.ஜி.ஆருக்குக் கொடுத்தவர் இந்த ப.நீலகண்டன்.
புகழ்பெற்ற பூம்புகார் படத்தை இயக்கினார். 1991ம் ஆண்டு வெளிவந்த தெய்வ திருமணங்கள்தான் இவர் இயக்கிய கடைசி படம். இதில் மீணாட்சி கல்யாணம் பகுதியை நீலகண்டன் இயக்கினார்.
எம்.ஜி.ஆரின் ஆஸ்தான இயக்குனராக இருந்தாலும் சிவாஜி நடித்த முதல் தேதி, கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி படங்களையும் இயக்கினார்.
திரை அனுபவங்களையும் திரைப்படத்துக்கான இலக்கணங்களையும் ஆங்கிலப் படங்களின் கதை கட்டமைப்புகளையும் ஆராய்ந்து பல நூல்களும் எழுதியிருக்கிற ப.நீலகண்டனுக்கு எழுத்தும் சினிமாவும் மட்டுமே சுவாசம்; வாழ்க்கை எல்லாமே!
இயக்குநர் ப.நீலகண்டன் 92ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 3ம் தேதி காலமானார். அவர் மறையும் போது, 76 வயது. இன்று ப.நீலகண்டன் 33வது ஆண்டு நினைவுதினம்.

