Home கிளாசிக் தமிழ் சினிமாவின் ‘திரையரங்கு தந்தை’ சாமிக்கண்ணு வின்சென்ட் நினைவு நாள் இன்று!

தமிழ் சினிமாவின் ‘திரையரங்கு தந்தை’ சாமிக்கண்ணு வின்சென்ட் நினைவு நாள் இன்று!

தமிழ் சினிமாவின் ‘திரையரங்கு தந்தை’ என்று போற்றப்படும் சாமிக்கண்ணு வின்சென்ட் மறைந்த தினம் இன்று (ஏப்ரல் 22, 1942). கோயம்புத்தூர்க்காரரான இவர், ஆரம்பத்தில் ரயில்வேயில் வேலை பார்த்துவிட்டு, பிறகு ஒரு பிரெஞ்சுக்காரரிடம் இருந்து ஒரு பழைய புரொஜெக்டரை வாங்கி ஊர் ஊராகப் போய் சினிமா காட்டத் தொடங்கினார்.

அதுவும் சும்மா இல்லை, ஒரு கூடாரத்தை (டெண்ட்) போட்டு இவர் நடத்திய அந்த ‘டெண்ட் கொட்டாய்’ கலாசாரம்தான் பின்னாளில் தென்னிந்தியத் திரையுலகின் வளர்ச்சிக்கு அச்சாணியாக அமைந்தது. 1914-லேயே கோயம்புத்தூரில் ‘வெரைட்டி ஹால் டாக்ஸீஸ்’ என்ற பெயரில் தென்னிந்தியாவின் முதல் திரையரங்கைக் கட்டி, சினிமா பார்ப்பதை ஒரு கொண்டாட்டமாக மாற்றினார்.

அதுமட்டுமில்லாமல், மின்சாரம் இல்லாத அந்த காலத்திலேயே சொந்தமாக ஜெனரேட்டர் தயாரித்து தியேட்டர் நடத்தியதோடு, அச்சகம், மாவு மில் எனப் பல தொழில்களிலும் முத்திரை பதித்த ஒரு கில்லாடி மனிதர் இவர்.

சினிமா என்பது வெறும் கனவு அல்ல, அது ஒரு மாபெரும் தொழில் என்பதை உலகுக்குக் காட்டிய வின்சென்ட்டின் புகழ் தமிழ் திரையுலக வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும்.

Exit mobile version