Monday, September 14, 2026
Homeசினிமாஜியோஹாட்ஸ்டாரின் (JioHotstar) புதிய படைப்பு ‘ரிசார்ட்’ - மார்ச் 13 முதல் ஒளிபரப்பாகிறது!

ஜியோஹாட்ஸ்டாரின் (JioHotstar) புதிய படைப்பு ‘ரிசார்ட்’ – மார்ச் 13 முதல் ஒளிபரப்பாகிறது!

ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) தளம் தனது அடுத்த அதிரடி வெளியீடான ‘ரிசார்ட்’ எனும் வெப் சீரிஸை அறிவித்துள்ளது. இந்த சீரிஸ் வரும் மார்ச் 13 முதல் ஒளிபரப்பாகிறது. வாரந்தோறும் வெள்ளிக்கிழமை 4 புதிய எபிசோட்கள் வெளியாகும் வகையில், இதன் ஒளிபரப்புத் திட்டமிடப்பட்டுள்ளது.

பிரபல ‘எருமை சாணி’ புகழ் விஜய் குமார் ராஜேந்திரன் இத்தொடரில் கதாநாயகனாக நடிப்பதோடு, கதையையும் எழுதியுள்ளார். சின்னத்திரையின் முன்னணி இயக்குநரான பிரவீன் பென்னட் உடன் விஜய் குமார் ராஜேந்திரன் முதன்முறையாக இந்த சீரிஸின் மூலம் கைகோர்த்துள்ளார்.

‘ஆர்.ஆர் ரிசார்ட்’ (RR Resort) என்ற கற்பனையான சொகுசு விடுதியில் இக்கதை நகர்கிறது. முறையான கல்வி கற்காத, ஆனால் சமையல் கலையில் அபார திறமை கொண்ட ஹவுஸ்கீப்பிங் ஊழியர் வெற்றி, ஒரு தலைசிறந்த செஃப் (Chef) ஆக வேண்டும் என்று கனவு காண்கிறார். ஒருபுறம் அவரது லட்சியம், மறுபுறம் பணியிடத்தில் இருக்கும் அதிகார ஒடுக்குமுறை என இவை இரண்டிற்கும் இடையே நடக்கும் விறுவிறுப்பான மோதலே இந்த சீரிஸின் மையக்கரு.

கோபக்கார தலைமைச் சமையல்காரராகவும், கதையின் முக்கிய வில்லனாகவும் ‘தலைவாசல்’ விஜய் நடித்துள்ளார். சமையலறையின் பரபரப்பான சூழலைத் தனது மிரட்டலான நடிப்பால் அவர் வெளிப்படுத்தியுள்ளார். இவர்களுடன் கீர்த்தி அமர், அபிநயா நேத்ரன், தர்ஷனா ஸ்ரீபால், சாய் தன்யா மற்றும் படவா கோபி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

காமெடி, டிராமா, லட்சியம் மற்றும் ஒரு சொகுசு விடுதியின் பின்னணியில் நடக்கும் கலாட்டாக்கள் என அனைத்தும் கலந்த ஒரு முழுமையான பொழுதுபோக்குத் சீரிஸாக ‘ரிசார்ட்’ அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரிசார்ட் சீரிஸ் வரும் மார்ச் 13 முதல், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 4 எபிசோட்களாக ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) தளத்தில் ஒளிபரப்பாகவுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments