விஜய் ஆண்டனி – சசி கூட்டணியில் உருவாகும் படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. ‘மார்கன்’ படத்தின் வெற்றிக்கு பிறகு பிரபல நடிகர் விஜய் ஆண்டனி கைவசம் ‘சக்தித் திருமகன், வள்ளி மயில், அக்னிச் சிறகுகள், காக்கி, லாயர்’ மற்றும் இயக்குநர் சசி படம் ஆகிய ஆறு படங்கள் உள்ளது.

இதில் இயக்குநர் சசி இயக்கும் படத்தில் முக்கிய வேடத்தில் ‘மார்கன்’ புகழ் அஜய் திஷன், ஸ்வாசிகா, லிஜோமோல் ஜோஸ் ஆகியோர் நடிக்கிறார்கள். இதனை விஜய் ஆண்டனியே தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘விஜய் ஆண்டனி பிலிம் CORPORATION’ மூலம் தயாரிக்கிறார்.
தற்போது, இந்த படத்துக்கு ‘நூறு சாமி’ என்று டைட்டில் வைத்துள்ளதாகவும், இதை அடுத்த ஆண்டு (2026) மே 1-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.