Sunday, March 15, 2026
HomeUncategorizedரிப்பன் பில்டிங்கட்டடத்துக்கு பர்த் டே டுடே!

ரிப்பன் பில்டிங்கட்டடத்துக்கு பர்த் டே டுடே!

சென்னையின் வெள்ளை மாளிகை என்று சொல்லப்படும் கார்ப்பரேஷன் தலைமை அலுவலகமான ரிப்பன் பில்டிங்கட்டடத்துக்கு பர்த் டே டுடே!

இந்த பிரமிக்க வைக்கும் மாளிகையை வடிவமைத்தவர் ஜி.எஸ்.டி.ஹாரிஸ். கட்டியவர் சென்னையை சேர்ந்த லோகநாத முதலியார்.சுமார் நான்கு ஆண்டு காலம் கட்டப்பட்ட இந்த மாளிகைக்கு அப்போது ஆன செலவு 7.5 லட்சம் ரூபாய். லோகநாத முதலியார் 5.5 லட்சம் ரூபாய் மட்டுமே இதற்காக பெற்றுக் கொண்டார் என்று ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

இந்த கம்பீரமான மாளிகை கடந்த 1909ம் ஆண்டு கட்ட துவங்கி 1913ம் ஆண்டு முடிக்கப்பட்டது. மூன்று தளங்கள் கொண்ட இந்த மாளிகையின் மொத்த பரப்பளவு 25 ஆயிரம் சதுரடி. மாளிகை 252 அடி நீளமும் 126 அடி அகலமும் மாளிகைக்கு அழகு சேர்க்கும் கடிகார கோபுரம் 132 அடி உயரமும் கொண்டவை. கோபுரத்தில் பொருத்தப்பட்டுள்ள கடிகாரம், 8 அடி விட்டம் உடையது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments