Home ஆன்மீகம் “சாய் பாதானந்தா” ஆன்மீகத் திரைப்படம்.. சாய் பாபாவின் அடிச்சுவட்டில் சாய் பாதானந்தாவின் தரிசனம்…

“சாய் பாதானந்தா” ஆன்மீகத் திரைப்படம்.. சாய் பாபாவின் அடிச்சுவட்டில் சாய் பாதானந்தாவின் தரிசனம்…

“சாய் பாதானந்தா”

பொய்யா மணியில் ஒரு.. ஆலயமணி..

சீரடி சாய் பாபாவின் பொய்யாமணி ஶ்ரீ திவ்ய ஷேத்ரம்..

சாய் பாபாவின் அடிச்சுவட்டில் சாய் பாதானந்தாவின் தரிசனம்…

“சாய் பாதானந்தா”

இந்த ஆன்மீகத் திரைப் படம்..

 ஸ்ரீ ராதா கிருஷ்ண சுவாமிஜியின் வாழ்க்கை  சரிதையாகும்..

அவர் பொய்யாமணி செல்வர் என போற்றப் பட்ட ஆத்ம ஞானி..

1906 ஆம் ஆண்டு திருச்சி அருகே பொய்யா

மணியில் பிறந்தவர்.. தெய்வத்தை தேடி அலைந்து தெய்வமாக வாழ்ந்தவர்..

பெங்களூர் சாய் ஸ்பிரிச்சுவல் சென்டரின் – Founder – Patron ஆகவும்.. மதராஸ் அகில இந்திய சாய் சமாஜத்தின் தலைவர் ஆகவும் பல வருடங்கள் சேவை செய்தவர் …

நிபந்தனையற்ற அன்பை போதித்தவர்.. அதை செயல்

படுத்தியும் வாழ்ந்தவர்..

சுவாமிஜி1980 இல் ஜனவரி 14-ஆம் நாள் … பெங்களுருவில் மஹா சமாதி அடைந்தார் ….

ஸ்ரீ ராதா கிருஷ்ண சுவாமிஜியின் ஆன்மீகப் பயண நிகழ்வுகளை … உள்ளடக்கி ஒரு ஆவணப் படைப்பாக ‘சாய் பாதானந்தா’ …  திரைப் படத்தை

ஸ்ரீ ராதாகிருஷ்ண சுவாமிஜி டிரஸ்ட் தயாரித்திருக்கிறது..

அவர் பிறந்த பொய்யா

மணியில்… பெங்களுர் சாய் ஸ்பிரிச்சுவல் சென்டர் மூலமாக   கட்டப்பட்ட ஷீரடி சாய்பாபா மந்திரிலும்…

பெங்களூரு தியாகராஜ நகரில் ஸ்ரீ ராதாகிஷ்ண சுவாமிகள் ஸ்தாபித்த சாய் ஸ்பிரிச்சுவல் சென்டர்.. சாய்பாபா ஆலயத்திலும்..

ஷீரடி சாய்பாபா ஆலயத்திலும்… படப்பிடிப்பு நடத்தி…அந்த புனித ஸ்தலங்களைத் தரிசிக்கும் உணர்வை  இத் திரைப் படம்  தந்திருக்கிறது..

‘ஒரு சிறந்த சாய் பக்தரின்..  சரிதையை… ஒரு மகோன்னதமான மகானின்…எளிய வாழ்வை… உலகுக்கு தெரியப் படுத்த வேண்டும்… வரலாற்று பதிவாக்க  வேண்டும்’ என்ற உயரிய ஆன்மீக நோக்கத்தோடு .. வியாபார நோக்கம் சிறிதளவும் இல்லாமல் ஸ்ரீ ராதா கிருஷ்ண சுவாமிஜி டிரஸ்ட் இந்த ‘சாய் பாதானந்தா’…  திரைப் படத்தை உருவாகியிருக்கிறது..

ஆழமான வசனங்கள் .. தெய்வீகமான பாடல்கள்..ஆழ் மனதை தாலாட்டும் இசை.. யதார்த்தமான நடிப்பு..கண் கவரும் ஒளிப்பதிவு.. கச்சிதமான படத் தொகுப்பு… என கலை நயத்தோடு சாய் பாதானந்தா திரைப் படம் உருவாக்கப் பட்டிருக்கிறது..

நவீன ஏ.ஐ.தொழில் நுட்பத்தையும்.. கிராபிக்ஸையும் பயன்படுத்தி காட்சிகள் உருவாக்கப் பட்டிருக்கின்றன..

திரை ஆக்கத்திற்கு சத்ய ஜோதி பிலிம்ஸ்

நிறுவனம் வழிகாட்ட..

B.நித்தியானந்தம் இப்படத்தை

இயக்கி இருக்கிறார்…

அருண் டேவிட் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்..

 இசையமைப்பு: அபிஷேக் ராஜு.

படத்தொகுப்பு : சுபாஷ் பகவதியப்பன்.

கலை:   P. நந்த குமார்..

தயாரிப்பு மேலாளர்: N மகேந்திரன்.

தயாரிப்பு நிர்வாகம்:

S.மலர் கண்ணன்.

வர்ணனை- சாய் சௌமியா அபிஷேக் ராஜு.

ஆனந்த மௌலி சுவாமிஜியாக நடித்திருக்கிறார்..

பழம் பெரும்.. ஆன்மீக நடிகர்கள்.. ரமணி, தம்பி பார்த்தசாரதி, ரங்கமணி, ஜெயம் மணியன், சங்கர நாராயணன்,ஶ்ரீதர்,

ஸ்ரீவத்சன், சாய் கோகுல்நாத், ரவிசங்கர்,  

மாஸ்டர் தரணிதரன், மாஸ்டர் சாலுவேஷ், வருண்.. ஆகியோரோடு..

ஜெயந்தி, சாந்தி, ரேவதி,  வர்ஷா, ஈஸ்வரி,கலா வரதன்.. ஆகியோரும் நடிக்க… ரசிகா அம்மனாக சிறப்புத் தோற்றத்தில் வருகிறார்..

 ‘சாய் பாதானந்தா’ திரைப் படம்… விரைவில் திரையரங்குகளில் வெளி வர இருக்கிறது…

ஓ.டி.டி. தளத்திலும் விரைவில் வெளி வர இருக்கிறது..

ஶ்ரீராதா கிருஷ்ண

சுவாமிஜி டிரஸ்ட்டி திரு. கிருஷ்ண குமார் அவர்கள் தன் குரு ஸ்ரீ ராதாகிருஷ்ண சுவாமிஜிக்கு செலுத்தும்.. தெய்வீக காணிக்கை இந்தத் திரைப் படம்..

சிறந்த  தெய்வீகப் படமாகவும்.. மதங்களை கடந்த மகான்… சீரடி சாய் பாபாவின் கீர்த்தியை சொல்லும் இறை சேவையாகவும் விளங்கும்…

‘சாய் பாதானந்தா’ திரைப் படத்தைப் பார்த்து… ரசித்து..

ஸ்ரீ ராதா கிருஷ்ண சுவாமிஜியின் அருளைப் பெறுங்கள்…

Exit mobile version