Thursday, February 5, 2026
Homeசினிமாசானியா மிர்சா வாழ்க்கை படம்.. நடிக்க போவது இவரா? ஒரே குழப்பம்!

சானியா மிர்சா வாழ்க்கை படம்.. நடிக்க போவது இவரா? ஒரே குழப்பம்!

சானியா மிர்சாவின் வாழ்க்கை படமாக போவது அனைவரும் தெரிந்த ஒன்றுதான். ஆனால் அதில் நாயகியாக யார் நடிக்கப் போவது என்ற குழப்பம் தற்போது பெரிய அளவில் ஓடிக்கொண்டு இருக்கிறது. 

கபில்தேவ், சச்சின், டெண்டுல்கர், மேரி கோம், எம்எஸ் தோனி, பி வி சிந்து, சாய்னா, மிதாலி ராஜ் போன்ற இந்திய விளையாட்டு வீரர் வீராங்கனைகளின் வாழ்க்கை திரைப்படம் ஆகியிருக்கிறது. அந்த வகையில் பிரபல இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா வாழ்க்கையும் படமாகிறது.

 கிடப்பில் போடப்பட்டிருந்த இந்த முயற்சிகள் தற்போது மீண்டும் தீவிரமாகி இருக்கின்றது. அவரது கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு முன்னனி  நடிகைகளான தீபிகா படுகோனே, பரினிதி சோப்ரா ஆகியோரை சானியா மிர்சா பரிந்துரைத்திருக்கிறார். தனது வாழ்க்கை வரலாறு படமாவது குறித்து சானியா மிர்சா மகிழ்ச்சி தெரிவித்துள்ளதுடன் இந்த படத்தில் அக்ஷய் குமார் உடன் நடிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 டென்னஸ் விளையாட்டில் இந்தியா சார்பில் பல்வேறு பட்டங்களை வென்றுள்ள சானியா மிர்சா, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர். சானியா மிர்சா, 2023 ஆம் ஆண்டில் டென்னிசிலிருந்து ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments