Thursday, February 5, 2026
HomeUncategorizedFREEDOM படப்பிடிப்பு ஓவர்.. கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர்!

FREEDOM படப்பிடிப்பு ஓவர்.. கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர்!

நடிகர் சசிகுமார் நடித்த டூரிஸ்ட் ஃபேமிலி படம் ட்ரெண்டிங்காக இருக்கும் இந்த சமயத்தில் இவர் நடிப்பில் வெளியாக இருக்கும் அடுத்த படமான FREEDOM படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. இந்தப் படத்தை சத்ய சிவா இயக்கியுள்ளார். சசிகுமாருடன் இணைந்து நடிகை லிஜோமோல் ஜோஸ் நடித்துள்ளார். இவர்களுடன்  சுதேவ் நாயர், ரமேஷ் கண்ணா, போஸ் வெங்கட் உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடித்துள்ளனர்.  ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

Freedom

சமீபத்தில் வெளியான FREEDOM படத்தின் டீசர், ட்ரைலர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற  நிலையில், இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. இலங்கைத் தமிழராக சசிகுமார் நடித்துள்ளார். இலங்கையிலிருந்து அகதியாக தமிழகத்திற்கு வரும் சசிகுமாரின் வலிகளையும், வேதனைகளையும் அப்பட்டமாக காட்டும் படமாக படம் அமைந்துள்ளது. இப்படம் ஜூலை 10ஆம்  தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில் படத்தின் படப்பிடிப்பு முடிந்ததை கொண்டாடும் விதமாக படக் குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது.

Freedom

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments