இந்த வாரம் திரையரங்குகளில் ப்ரீடம், ஓஹோ எந்தன் பேபி, வனிதா விஜயகுமாரின் மிஸ்ஸஸ் அண்ட் மிஸ்டர், தேசிங்குராஜா 2, மாயக்கூத்து, தோற்றம் மற்றும் ஹாலிவுட் படமான சூப்பர்மேன் உள்ளிட்ட படங்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சசிகுமாரின் ஃப்ரீடம் படம் தற்போது வெளியாகாது என தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாக வேண்டிய படங்கள் வரிசை கட்டி நின்று கொண்டிருந்த சமயத்தில் சசிகுமார் நடிப்பில் வெளியாக உள்ள ப்ரீடம் திரைப்படம் வெளியாகவில்லை.
இயக்குனர் சத்திய சிவா இயக்கத்தில் சசிகுமார், லிஜோமோல் ஜோஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள இடம் திரைப்படம் ஜூலை 10ஆம் தேதி அதாவது நேற்று திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் நேற்று வெளியாகவில்லை. அதனால் இன்று வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் இன்றும் வெளியாகாமல் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது. தற்போது இந்த திரைப்படம் ரிலீஸ் ஆகும் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட காலகட்டத்தில் ராமேஸ்வரம் மண்டபத்தில் அகதிகளாக இருந்த ஈழத் தமிழர்களை விசாரிப்பதற்காக வேலூர் அழைத்துச் சென்று நான்கு வருடங்களாக கொடுமைப்படுத்திய உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டுள்ள ஃப்ரீடம் திரைப்படம் ரிலீஸ் தேதி தள்ளிப் போனதாக அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகி உள்ளது.

