இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் கோலிவுட்டின் சிறப்பான இயக்குநராக பெயர் பெற்றவர். தான் இயக்கிய படங்களில் நடித்து நல்ல நடிகராகவும், இயக்குநராக தன்னை நிரூபித்தவர். தற்போதும் தொடர்ந்து நடித்து வருகிறார்.
16 வயதினிலே படத்தில் துணை இயக்குநராக அறிமுகமான பாக்யராஜ் தொடர்ந்து பல படங்களை இயக்கி நடிகராகவும் நிலைத்தார். இவரது படங்களின் திரைக்கதை மற்றும் தனித்துவமான கேரக்டர்கள் ஆகியவை இவருக்கு இந்திய அளவில் அதிகமான ரசிகர்களை பெற்றுத் தந்துள்ளது.
இந்நிலையில் இவரது சமீபத்திய போட்டோஷுட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

