Wednesday, March 11, 2026
HomeUncategorizedதீரர் சத்தியமூர்த்தி (Satyamurti) பிறந்த தினம் இன்று 

தீரர் சத்தியமூர்த்தி (Satyamurti) பிறந்த தினம் இன்று 

சென்னை பார்த்தசாரதி கோயிலில் 1930-லேயே நம் தேசியக் கொடியை ஏற்ற முயன்றபோது கைது செய்யப்பட்டவர் இவர். ‘இதுபோல பல சத்தியமூர்த்திகள் இருந்தால் ஆங்கிலேயர் எப்போதோ ஓடியிருப்பர்’ என்றார் காந்தியடிகள்.

 சென்னை மாகாண கவுன்சில் உறுப்பினராக பதவி வகித்த 6 ஆண்டுகளில் இவர் ஆற்றிய உரைகள், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை கதிகலங்க வைத்தன. சைமன் கமிஷன் எதிர்ப்பு, ஒத்துழையாமை இயக்கம், சுதேசி இயக்கம் ஆகியவற்றில் இவரது பங்கு மகத்தானது. தனது அனைத்து சொத்துகளையும் நாட்டுக்கு அர்ப்பணித்துவிட்டு, வீட்டு வாடகைகூட கொடுக்க முடியாமல் சிரமப்பட்டிருக்கிறார்.

காமராஜரின் அரசியல் வழிகாட்டியாகத் திகழ்ந்தவர். 1936-ல் காங்கிரஸ் கமிட்டி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1939-ல் சென்னை மேயராகப் பணியாற்றினார். தமிழை ஆட்சி மொழியாக்க அப்போதே வாதாடியவர். பல மேடைகளில் கே.பி.சுந்தராம்பாள், கிட்டப்பாவை தேசியப் பாடல்கள் பாடவைத்து மக்களிடம் சுதந்தர எழுச்சியை ஊட்டினார்.

சென்னையின் தண்ணீர் பஞ்சத்தைப் போக்க பிரிட்டிஷ் அரசுடன் போராடி பூண்டி நீர்த்தேக்கத்துக்கு ஒப்புதல் பெற்று, ஓராண்டுக்குள் அடிக்கல் நாட்டினார். 1942-ல் சத்தியாகிரகத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டு நாக்பூரில் சிறையில் அடைக்கப்பட்டார்.  இவரது ஒப்பற்ற பணியை நினைவுகூர்ந்து, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்துக்கு ‘சத்தியமூர்த்தி பவன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. தீரர், சொல்லின் செல்வர், நாவரசர் என்றெல்லாம் புகழப்பட்டவர் சத்தியமூர்த்தி.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments