நாட்டின் கடல் உணவு ஏற்றுமதி மந்தமாக இருப்பதாக மத்திய வணிகத்துறை தகவல் தெரிவித்துள்ளது. 2024-25-ஆம் நிதி ஆண்டில் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு 16 லட்சத்து 98 ஆயிரத்து 170 டன் கடல் உணவு பொருட்கள் ஏற்றுமதியாகி உள்ளன. இதன் மதிப்பு ரூ.62,408 கோடியாகும்.
அதற்கு முந்தைய நிதி ஆண்டில் 2023-24 இந்தியாவில் இருந்து ரூ.60 ஆயிரத்து 523 கோடிக்கு கடல் உணவுகள் ஏற்றுமதி ஆகின. அதோடு ஒப்பிடும்போது கடல் உணவை ஏற்றுமதி துறையில் பெரிய வளர்ச்சி இல்லாமல் மந்தநிலையில் இருந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அமெரிக்கா ஐரோப்பா போன்ற முக்கிய சந்தைகளில் பொருளாதார சவால்கள் ஏற்றுமதிக்கான போட்டி மற்றும் கடுமையான தரநிலை விதிமுறைகள் ஆகியவை வளர்ச்சியை தடுக்கும் காரணங்களாக கூறப்படுகின்றன.

