Tuesday, March 24, 2026
HomeUncategorizedதிருமண வாழ்க்கையில் இந்த விஷயத்தில் கவனமாக இருங்கள்! இல்லனா ஜோலி முடிஞ்சிரும்!

திருமண வாழ்க்கையில் இந்த விஷயத்தில் கவனமாக இருங்கள்! இல்லனா ஜோலி முடிஞ்சிரும்!

ஆணோ, பெண்ணோ திருமண வாழ்க்கைக்குள் நுழையும் பொழுது பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் நுழைவது உண்டு. அதேபோல் தங்கள் வாழ்க்கை துணை அழகாகவும், இனிமையாகவும் இருக்க வேண்டும் என்று அனைவரும் எதிர்பார்ப்பார்கள்.  திருமண வாழ்க்கை சந்தோஷமாகவும், சிறப்பானதாகவும் இருப்பதற்கு அவர்கள் வாழ்க்கையில் ரொமான்ஸ் என்றுமே நிறைந்திருக்க வேண்டும்.

 ரொமான்ஸ் இல்லாத வாழ்க்கை சலித்து விடும். தற்போது இருக்கும் காலகட்டத்தில் கணவன் மனைவி என இருவரும் வேலைக்கு செல்வதால் வேலைப்பளு அதிகமாக சுமக்கின்றனர். இதனால் தங்களின் வாழ்க்கையில் ரொமான்ஸ் என்ன என்பதை மறந்து விடுகிறார்கள். அதனாலேயே இருவருக்கும் இடையே பல சண்டை சச்சரவுகள் வருவதுண்டு. திருமண வாழ்க்கை சந்தோஷமாக இருப்பதற்கும் கணவன் மனைவிக்குள் பிரிவை ஏற்படுவதற்கும் என்னென்ன காரணங்கள் என்பதை இப்பதிவில் பார்ப்போம்.

 முதலில் கணவன் மனைவி இருவரும் மனம் விட்டு பேச வேண்டியது அவசியம். எதுவாக இருந்தாலும் வெளிப்படையாக பேசினால் மட்டுமே திருமண உறவு பலமாக இருக்கும். அப்படி பேசாமல் இருப்பதினால் பல தவறான புரிதல்களும், ஏமாற்றங்களும் அவர்களின் பிரிவுக்கு வழிவகுக்கும். 

பல பேருக்கு திருமணம் ஆகி பல ஆண்டுகள் ஆனதனால் திருமண உறவில் ரொமான்ஸ் குறைந்துவிடும் இதற்கு முக்கிய காரணம் துணையில் ஒருவர் அல்லது இருவரின் வேலைப்பளு, மன அழுத்தமாக கூட இருக்கலாம். ஏற்கனவே கூறியது போல் கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்வதனால் அவர்களால் ரொமான்ஸில் ஈடுபட முடிவதில்லை. அவர்கள் மனதுக்குள் வேலை பற்றிய சிந்தனை, குழப்பம் உள்ளிட்ட பல காரணங்களால் மனம் விட்டு பேசக்கூட நேரம் கிடைக்காது. இப்படிப்பட்ட தம்பதிகள் பல பேர் திருமண வாழ்வில் இருந்து வெளியே வருகிறார்கள். 

ஒரே மாதிரியான லைஃப் ரொட்டீனை வாழ்வதும் சலிப்புத் தன்மையை ஏற்படுத்தும். அதனால் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை வெளியே செல்வது, குடும்பங்களுடன் சந்தோஷமாக நேரத்தை கழிப்பது, பரிசுகளை பகிர்ந்து கொள்வது, திருமண நாள் மற்றும் பிறந்த நாள்களை சந்தோஷமாக தனியாக செலவிடுவது உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் மூலம் தங்களின் மனதில் உள்ள விஷயங்களை பகிர்ந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கும். 

ஒருவருக்கொருவர் பரிசு கொடுத்துக் கொள்வதும் அன்பை பரிமாறிக் கொள்வதும் உறவுகளை பலப்படுத்தும். அதேபோல் ஒருவர் எதையாவது முயற்சி செய்தால் அதனை கண்டுக்காமல் செல்வதும், கவனிக்காமல் புறக்கணிப்பதும் பிரிவை உண்டாக்கும். ஒருவருக்கொருவர் செய்யும் புதிய முயற்சிகளை மாற்றி மாற்றி பாராட்டிக்கொள்வதும், தகவல்களை பரிமாறிக் கொள்வதும் மன அழுத்தத்தை குறைக்கும்.. 

திருமண உறவில் தம்பதிகள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் விரக்தியாகவும், வெறுப்பாகவும் உணர்வது மிகவும் ஆபத்தானது. கடந்த கால நிகழ்வுகளை மனதில் வைத்துக் கொண்டு ஒவ்வொரு முறையும் பேசுவது திருமண வாழ்வை அழித்துவிடும். எதிர்மறையான சூழ்நிலைகளை உருவாக்கிவிடும். அதனால், நன்மையா தீமையோ அன்றைக்கே முடித்துவிட்டு அடுத்த நாள் புதியதாக தொடங்கினால் கணவன் மனைவி உறவு என்றும் இளமையாகவே நிலைத்து நிற்கும். விட்டுக் கொடுப்பதும், ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வதும், பாராட்டுவதும் திருமண வாழ்க்கையில் மிகவும் முக்கியமானதாகும். 

என்னப்பா புரியுதா? என்ன தப்பு செஞ்சி இருந்தாலும் , இப்போவே போய் வீட்ல சாரி கேட்டு சந்தோசமா இருக்க வழிய பாருங்க!

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments