Wednesday, February 4, 2026
Homeசெய்திகள்’வலி நிறைந்த வாழ்க்கை’ பீலா வெங்கடேசன் 56 வயதில் திடீர் மரணம்! மறக்க முடியாத ஐஏஎஸ்!

’வலி நிறைந்த வாழ்க்கை’ பீலா வெங்கடேசன் 56 வயதில் திடீர் மரணம்! மறக்க முடியாத ஐஏஎஸ்!

பீலா ராஜேஷ் பாரம்பரிய குடும்பத்தை சேர்ந்தவர். வெங்டேசன் – ராணி தம்பதிகளுக்கு மகளாக 1969ம் ஆண்டு பிறந்தார். பீலாவின் அப்பா வெங்கடேசன் போலீஸ் டி.ஜி.பி.யாக  ஒர்க செஞ்சு ரிட்டயர்ட் ஆனவர். அவரது அம்மா ராணி வெங்கடேசன், பாரம்பர்ய காங்கிரஸ்காரர். நாகர்கோவிலை பூர்வீகமாகக் கொண்ட ராணி வெங்கடேசன் 2006 சட்டசபைத் தேர்தலில் சாத்தான்குளம் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ., ஆனாராக்கும். தூத்துக்குடி மாவட்டம் வாழையடி தான் வெங்கடேசனின் சொந்த ஊர்.

வெங்கடேசன் – ராணி வெங்கடேசன் தம்பதிக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன். மகன் கார்த்திக். மகள் பீலா இருவரும் சிங்கப்பூரில் செட்டிலாகிவிட, மற்றொரு மகள் பீலா மட்டும் இந்தியாவில் இருந்தார். பீலா படிச்சு, வளர்ந்தது எல்லாமே சென்னை, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கொட்டிவாக்கம் தான். படிப்பில் கெட்டிக்காரராக இருந்த பீலா மெட்ராஸ் மெடிக்கல் காலேஜீல் எம்.பி.பி.எஸ்., முடித்தார். 

1989 ஒடிசா கேடர் ஐ.பி.எஸ்., அதிகாரியான ராஜேஷ் தாஸை லவ் பண்ணி 1992ல் மேரேஜ் செய்து கொண்டார். திருமணத்துக்குப் பின் ராஜேஷ் தாஸ் தமிழகத்துக்கு தன் பணியிடத்தை மாற்றிக்கொண்டார். இவங்ககளுக்கு இரண்டு மகள்கள். கொட்டிவாக்கத்திலுள்ள இவர்கள் வீட்டுக்கு அருகிலேயேதான் பீலா ராஜேஷின் பெற்றோரும் வசிக்கின்றனர். 

கணவரைப் போல தானும் படித்து உயர்பொறுப்புக்கு வர வேண்டுமென்ற உத்வேகத்தில், இந்திய குடிமைப் பணிகள் தேர்வெழுதி 1997ம் ஆண்டு ஐ.ஏ.எஸ்., ஆனார் பீலா ராஜேஷ். முதலில் இவருக்கு பீகார் மாநில கேடர் ஒதுக்கப்பட்டது. 

ஐ.பி.எஸ்., அதிகாரியான தன் கணவர் தமிழகத்தில் பணிபுரிவதை மேற்கோள்காட்டி 2000-ம் ஆண்டு தமிழகத்துக்கு தன் பணியிடத்தை தற்காலிகமாக மாற்றிக் கொண்டார். பின்னர், 2003-ம் ஆண்டு பீகாரிலிருந்து பிரிந்து புதிதாக உதயமான ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு மாற்றப்பட்டார். பின் மத்திய அரசின் பணிக்குச் சென்றவர், இந்திய ஹோமியோபதி மருத்துவம், மத்திய ஜவுளித்துறைகளில் பணியாற்றினார். நீண்ட போராட்டத்துக்குப் பின், மீண்டும் தமிழ்நாடு கேடர், இவருக்குக் கிடைச்சுது.

Beela Venkatesan

தமிழ்நாட்டில் செங்கல்பட்டு துணை கலெக்டர், நகர் ஊரமைப்பு இயக்ககத்தின் இயக்குநர், மீன்வளத்துறை இயக்குநர் எனப் பல்வேறு பொறுப்புகளை வகித்த இவர், சுகாதாரத்துறை செயலாளராக 2019 பிப்., மாதம் பொறுப்பேற்றார். ஆரம்பம் முதலே பீலா ராஜேஷ் துடிப்புடன் செயலாற்றுவதில் பெயர் பெற்றவர். இரவு எந்நேரமானாலும் கொட்டிவாக்கத்திலுள்ள தன்னுடைய வீட்டுக்குச் சென்ற பின் தான் இரவு உணவை உண்பார்.இறகுப் பந்து விளையாடுவதில் மிகுந்த ஆர்வம் கொண்ட பீலா, சுகாதாரத்துறை செயலாளராக நியமிக்கப்பட்ட பிறகு, பணிச்சூழல் காரணமாக இப்போது விளையாடுவதில்லை.

கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் அதிகரித்து வரும் நிலையில், பீலா ராஜேஷுக்கான பொறுப்பும் அதிகரிச்சிது. டெய்லி காலை 8 மணிக்கெல்லாம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தலைமைச் செயலாளர் சண்முகம் இருவரிடத்திலும் கொரோனா பாதிப்பு குறித்த அப்டேட்டுகளை பகிர்ந்துகொள்கிறார்.தமிழகம் முழுவதும் எடுக்கப்படும் சுகாதார நடவடிக்கைகள், பாதிக்கப்பட்டோருக்கு வழங்கப்படும் சிகிச்சை, புதிய நோயாளிகளின் பட்டியல் என்று ஒருநாளைக்கு 18 மணிநேரம் பம்பரமாக உழன்றார். இரவு 12 மணி வரையில் கொரோனா நடவடிக்கைகளை மேற்பார்வையிட்டுவிட்டு வீட்டுக்குச் சென்றால், காலை 6 மணிக்கெல்லாம் திரும்ப எழுந்துடுவார்.

பீலா ராஜேஷிடமிருந்துதான் தினமும் ரிப்போர்ட்டுகளை மத்திய அரசும் வாங்கிச்சு. பலருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு, தமிழகம் பரபரப்பாகி உள்ள சூழலில், பதற்றமில்லாமல் நிதானத்துடனும் ஓய்வில்லாமலும் பணியாற்ற வேண்டிய மிகப்பெரும் பொறுப்பு பீலா ராஜேஷுக்கு இருந்துச்சு. ஊடகங்களை நம்பிக்கையுடனும், தைரியத்துடனும் எதிர்கொண்டு அனைத்து புள்ளிவிவரங்களையும் தெரிவித்து வந்தார்.

அந்த மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ள இவர் காலமானது கவலை அளிக்கிறது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments