Wednesday, February 4, 2026
Homeவணிகம்இந்திய முதலீடாளர்கள் வயிற்றில் பாலை வார்க்கும் பங்குச்சந்தைகள்!

இந்திய முதலீடாளர்கள் வயிற்றில் பாலை வார்க்கும் பங்குச்சந்தைகள்!

 ஜிஎஸ்டி வரி விதிப்பில் சீர்திருத்தம் கொண்டு வருவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. உலக அளவில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் உடனான உக்ரைன்  அதிபர் ஜெலன்ஸ்கியின் சந்திப்பு நேர்மறையாக முடிந்ததால் நீண்ட நாட்களாக நீடித்து வரும் உக்ரைன் ரஷ்யா போர் முடிவு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது இந்திய பங்குச் சந்தைகளில் எதிரொலித்தன. 

நேற்று முன்தினம் இந்திய பங்குச் சந்தைகள் நீண்ட நாட்களுக்குப் பிறகு மாபெரும் எழுச்சி கண்டன. நேற்று வாரத்தின் இரண்டாவது நாளாக எழுச்சி தொடர்ந்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் ‘சென்செக்ஸ்’ 370.64 புள்ளிகள் அதாவது 0.46 சதவீதம் உயர்ந்து 81,644 புள்ளிகளில் வர்த்தகம் முடிவடைந்தது.

 தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் ‘நிப்டி’ 103.70 புள்ளிகள் அதாவது 0.42 சதவீதம் உயர்ந்து 24,980 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. பங்குச்சந்தைகள் தொடர் உயர்வால் இந்திய முதலீட்டாளர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments