Thursday, February 5, 2026
HomeUncategorized"புதுக்கோட்டை கம்பன் கழகத்தின் ஏழாம் நாள்" - சிறப்பு நிகழ்ச்சி!

“புதுக்கோட்டை கம்பன் கழகத்தின் ஏழாம் நாள்” – சிறப்பு நிகழ்ச்சி!

புதுக்கோட்டை கம்பன் கழகத்தின் ஏழாம் நாள் நிகழ்ச்சியானது  புதுக்கோட்டை நகர் மன்றம் “தமிழ்ச்செம்மல்”ரா.சம்பத் குமார் அரங்கில் 24 -7 -2025  வியாழக்கிழமை அன்று”உரை அரங்கம்”,  கம்பன் திரை அரங்கம் என இரு அமர்வுகளாக நடைபெற்றது.

      ஜியோ பார்க் & ஜியோ மஹால் திரு.க.மணிவண்ணன் அவர்கள் தலைமையில்,  திரு.இராம.சேதுபதி அம்பலக்காரர்,  அ.விஜயகுமார், திரு.பிரசாத் ஆகியோரின் வாழ்த்துரையுடன் தொடங்கியது.

     ஓய்வு பெற்ற காவல் துறை தலைமை இயக்குனர் திரு. சதீஷ்குமார் டோக்ரா அவர்கள் சிறப்புரையாற்றினார்.

   திரு. சதீஷ்குமார் டோக்ரா அவர்களுடன் அவரது மனைவியும் விழாவில் பங்கேற்றார். அவர்கள் இருவருக்கும் புதுக்கோட்டை கம்பன் கழகத்தலைவர் திரு.எஸ்.ராமச்சந்திரன் அவர்கள் நினைவுப்  பரிசு வழங்கி கெளரவித்தார்.

     பொற்றாமரை திரு என் ராமச்சந்திரன், வழக்கறிஞர் திரு சி ஜெகதீசன், தொழில் அதிபர் திரு ராமசேதுபதி அம்பலக்காரர்,  நற்சாந்துப்பட்டி.திரு.செல்வம்  அழகப்பன்  பொற்றாமரை திரு விஜயகுமார், இந்திய உணவு பாதுகாப்புக் கழக உறுப்பினர் திரு ஆர். ஜீவானந்தம்,   ரோட்டரி கிளப் முன்னாள் துணை ஆளுநர் திரு.ச.பிரசாத்  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

kamban kazhagam

     இரண்டாம் அமர்வாக கம்பன் திரையரங்கம்  விழா குழு உறுப்பினர் திரு .என்.செல்லத்துரை அவர்களின் வரவேற்புரை வழங்க, குடுமியான்மலை  சவரிமுத்து அருள்தாஸ் அறக்கட்டளை  இயக்குனர் டாக்டர் ஏ . ரவிச்சந்திரன் அவர்கள் விழாவிற்கு தலைமை ஏற்றார்.

   ஊடகவியலாளர் திரு எம் எஸ் பரணி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.

            “இவர்கள் பார்வையில் கம்பன்” என்னும் பொருளில் நடைபெற்ற அரங்கத்திற்கு முனைவர்  ஞானசம்பந்தன் அவர்கள் தலைமை ஏற்றார்.

“கவிஞர் பார்வையில்” என்னும் தலைப்பில் திரைப்பட பாடல் ஆசிரியர் திரு கலைக்குமார் ,  “இயக்குனர் பார்வையில்” என்னும் தலைப்பில் திரைப்பட இயக்குனர் திரு பத்ரி,  “திரைக்கதை/ வசனகர்த்தா பார்வையில்” என்னும் தலைப்பில் திரைப்பட வசனத்தில் பிருந்தா சாரதி  ஆகியோர் உரையாற்றினர்.

     “ஆதிகாலத்து அலங்கார மாளிகை” திரு.பா. மணிகண்டன்,  பி.எஸ்.கே கல்வி நிறுவனம் திரு.பி. கருப்பையா, நைனா முகமது கல்லூரி முதல்வர். முனைவர்.திரு.சி திருச்செல்வம்,  மாமன்னர் கல்லூரி முதல்வர் முனைவர் ஆர் புவனேஸ்வரி,  பாரதிதாசன் பல்கலைக்கழகம் உடற்கல்வியியல் துறைத் தலைவர். முனைவர் திரு. பழனிச்சாமி  ஆகியோர் முன்னிலை வகித்து வாழ்த்துரை வழங்கினார். 

    புதுக்கோட்டை கம்பன் கழகத்தலைவர் திரு.எஸ்.ராமச்சந்திரன் அவர்கள் பிரமுகர்களை கெளரவித்தார்.

    மாவட்ட தமிழ் ஆசிரியர் கழகத் தலைவர்.  திரு.கு.ம. திருப்பதி அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.

   இரு அமர்வுகளுக்கும் திரு.என். செல்லத்துரை வரவேற்புரையும்  புதுக்கோட்டை கம்பன் கழகச்செயலாளர். புதுகை.ச.பாரதி தொகுப்புரையும் வழங்கினர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments