பொன்ராம் இயக்கத்தில், மறைந்த விஜயகாந்த் அவர்களின் மகன் சண்முக பாண்டியன் நடித்துள்ள புதிய கிராமத்து கதையாகும். இப்படம் தற்போது Tentkotta ஓடிடி தளத்தில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
கிராமத்தில் பெரிய மனிதராக வெளியில் நல்லவராகத் தோன்றும் கதாபாத்திரம், உள்ளுக்குள் கஞ்சா மற்றும் மீன் கடத்தல் போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. அதே சமயம், அந்த பணத்தை ஊர் மக்களின் நலனுக்காக பயன்படுத்தும் இரட்டை முகம் கொண்ட மனிதராக சரத்குமார் நடித்துள்ளார்.
சண்முக பாண்டியன், சரத்குமாரை தந்தைபோன்ற ஒருவராக மதித்து காப்பாற்றும் இளைஞராக நடித்து, இருவருக்கிடையேயான பாசம், நம்பிக்கை மற்றும் ஊருக்காக எதையும் செய்யத் தயார் மனநிலை தான் படத்தின் மையக் கருத்தாக அமைந்துள்ளது.
ஓடிடி வெளியீட்டிற்கு பிறகு ‘கொம்பு சீவி’ திரைப்படம் Tentkotta தளத்தில் Trending No.1 ஆகி, திரையரங்குகளில் மிஸ் செய்த ரசிகர்களும் குடும்ப பார்வையாளர்களும் அதிக ஆர்வத்துடன் பார்ப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிய பார்வையாளர்களை ஈர்த்து, படம் மீண்டும் பேசுபொருளாக மாறியுள்ளது.

